#tnpsc group 2 new syllabus: இனி வடமாநில போட்டியாளர்களுக்கு கிடுக்கு பிடி! மாறிவிட்டதா TNPSC.? அதிர்ச்சியில் போட்டித்தேர்வர்கள்!
  • 15:54PM Sep 28,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 15:54PM Sep 28,2019 Tamil Nadu

வட இந்தியாவில் குறிப்பாக BIMARU மாநிலங்கள் எனக் குறிக்கக் கூடிய பீகார் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உத்தரப் பிரதேச மாநிலத்தவர்கள்  தமிழகத்தின் வேலைவாய்ப்பினை குறிப்பாக, அரசு வேலை வாய்ப்பினை  ஆக்கிரமிப்புகள் செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் செய்யப்பட்ட பொது செய்த சட்ட திருத்தம் ஆகும். ஆனால் கர்நாடகத்திலோ, இமாச்சல் பிரதேசத்திலோ, குஜராத்திலோ என இன்னும் பல மாநிலங்களில் 80 % பேர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலை வாய்ப்பினை பெறக் கூடிய சூழலே நிலவி வருகின்றது.

இந்தியாவிற்கு அதிக வருமானத்தை ஈட்டி தருவது குறிப்பாகச் சொல்லப் போனால், முதல் இடத்தில் இருப்பது தமிழகம் வரி ரீதியாக, ஆனால் கணக்குகளின்படி மஹாராஷ்ட்ரா மாநிலம் தான் முதல் இடம் இருப்பதாக நம்மில் பலர் நம்பி வருகின்றோம். ஆனால் அதை எவ்வாறு நோக்க வேண்டும் எனில் தமிழகத்தில் இருக்கும் தொழிற் சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கட்டுமானங்கள் செலுத்தக் கூடிய வரியில் தமிழகத்தின் கணக்கு பார்க்கப் படுகின்றது.

ஆனால் மகாராஷ்டிராவின் வருமானம் ஏண் அதிகம் பார்க்கப்படுகின்றது என்றால் பல நூறு வருடங்களுக்கு முன்னர் முதல், பல தொழிற்சாலைகளின் தலைமை நிறுவனங்கள் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு அங்குப் பதிவு செய்யப்பட்டு உள்ள காரணத்தினால் அந்த தொழிற்சாலைகள் அந்த மாநிலத்தில் இல்லாவிட்டாலும் , வேறு எந்த மாநிலத்திலிருந்தாலும் உதாரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் குஜராத் மாநிலத்தில் உள்ளது ஆனால் அவர்களின் வரிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவிடப்படுகின்றது.

இது போல் பல நிறுவனங்கள் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு உள்ளதால் அந்த வருமானங்கள் மகாராஷ்டிராவின் கணக்கில் அதிகமாகப் பதிவு செய்யப் படுகின்றது. இருந்தாலும் இந்தியாவில் தமிழகம் தான் அதிக வருமானம் ஈட்டும் மாநிலம். அதிலும் முப்பது சதவீதம் நமது மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும், கல்வி, மருத்துவம் போன்ற சமூகத் தேவைகளுக்காகவும் திருப்பி கிடைக்கின்றது. மீதி எழுபது சதவீதத்திற்கு மேல் மத்திய அரசு எடுத்து அதை உத்திர பிரதேசம் பீகார் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு ஏழை மாநிலங்களுக்குக் கொடுத்து விடுகின்றது.

நாற்பது வயதிற்குக் கீழ் உள்ள அனைவரும் கடந்த சில வருடங்களாக வட இந்தியர்கள் மட்டுமே பணிக்கு அமர்த்தப்பட்டு வருவது அறிய முடியும். இவ்வாறாக நமது வருமானத்தையும் எழுபது சதவீதம் எடுத்துக் கொண்டு, நமது வேலைவாய்ப்பையும் நிமிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு  TAMILNADU PUBLIC SERVICE COMMISSION வேலை வாய்ப்பிற்கும் வட இந்தியர்கள் திட்டமிட்டுக் குறிவைப்பதற்கு தற்போது முட்டுக்கட்டை போட அறிவிப்பு வெளியாகியுள்ளது.  group 2 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டு, இனி தமிழ் புலமை இருந்தால் மட்டுமே பணி என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வில் இருந்த தமிழ் நீக்கப்பட்டு, முதன்மை தேர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதால், கட்டாயம் தமிழ் தெரிந்தால் மட்டுமே தமிழக அரசு பணி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. | RAILWAY: தனியாருக்கு விடுவதால் என்ன பாதிப்பு??? தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு என்ன??

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top