Misc

கடலுக்கு மிக அருகில் இருந்தும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுனாமி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை ஏன் தெரியுமா?

Oct 06 2021 05:02:00 PM

2004 ஆம் ஆண்டு நம் யாராலும் மறக்க முடியாத வருடம். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள எல்லா கடற்கரைகளிலும் சுனாமி கோ ர தாண்டவம் ஆடி மக்களின் உ யிரை சூறையாடியது. எத்தனையோ மசூதிகளும், தேவாலயங்களும், இந்து கோவில்களும் இந்த சுனாமியால் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இந்தியாவையே இந்த சுனாமி புரட்டிப் போட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

tiruchendur murugan moolavar kugai story

ஏன் இந்தியாவே கொண்டாடும் ரிஷிகேஷில் கூட ஒரு முறை வெள்ளம் வந்து கடவுளின் சிலை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சென்றதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்து பார்த்தால் கடல் தெரியும். கடலுக்கும் கோவிலுக்கும் உள்ள தொலைவு ஒரு 100 மீட்டர் தூரம் கூட இருக்காது.

tiruchendur murugan moolavar kugai story

திருச்செந்தூர் மூலவர் குகை கடல் மட்டத்தில் இருந்து பத்து அடி கீழே உள்ளது. சுனாமி வந்த நேரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் என்ன நடந்தது தெரியுமா? கோவில் சுவரை எப்பவும் தொட்டுக்கொண்டிருக்கும் கடல் ரெண்டு கிலோமீட்டர் வரை உள்வாங்கி பின்னோக்கி சென்றுவிட்டது. அதுவரை யாரும் பார்க்காத மிகப்பெரிய பாறைகள் எல்லாம் கடலில் தெரிந்தது.

tiruchendur murugan moolavar kugai story

கோவிலுக்கும், கோவிலை சுற்றி இருந்த எந்த மக்களுக்கும் சிறு தொந்தரவு கூட ஏற்படவில்லை. திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்து 2 மைல் தொலைவில் உள்ள ஜீவா நகரில் கூட சுனாமி அலைகள் வந்து பல சேதாரங்களை ஏற்படுத்தியது என்று செய்திகள் வெளிவந்தன. அது ஏன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மட்டும் எதுவும் ஆகவில்லை. அவ்வளவு வேகமான அலைகளுடன் வரும் கடல் முருகனின் சன்னிதானத்தை அடைந்தவுடன் அமைதியாக திரும்பி செல்லும். இதை நாமே நேரில் திருச்செந்தூர் சென்றால் பார்க்கலாம். அதேபோல நாம் மனதில் எவ்வளவு கவலைகளுடன் இந்த கோவிலுக்கு சென்றாலும் நம்மை சாந்தப்படுத்தி முருகப்பெருமான் அனுப்பி வைப்பார் என்பது ஐதீகம்.

tiruchendur murugan moolavar kugai story