கள்ளக்காதலை கண்டுபிடிக்க முக்கிய வழிகள்!
  • 13:58PM Feb 20,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 13:58PM Feb 20,2019 Chennai

தற்போது செய்திதாளை எடுத்துப்பார்த்தால் கள்ளத்தொடர்பு பற்றி இடம்பெறாத செய்திகளே இருக்காது! கள்ளக்காதலில் ஈடுபடும் கணவன், கணவனைக் கழட்டிவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி என்று தினமும் ஒரு செய்தியை படிப்போம். பலருக்கு இந்தச் செய்திகளைப் பற்றிக் கவலை இல்லாவிட்டாலும், சிலருக்கு அவர்களது துணையின் நடவடிக்கையில் கள்ளத்தொடர்பு எதாவது இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும். அப்படிச் சந்தேகம் இருப்பவர்கள் இந்தப் பதிவை பார்த்து கள்ளக்காதலை கண்டுபிடிக்க முக்கிய வழிகளைத் தெரிந்துகொள்ளவும்.

1. இது ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான ஒன்று, திருமணம் ஆன பிறகு உடை, தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் திடீரென அழகாகத் தெரிய ஆசைப்படுவார்கள். இளமையாகத் தோன்ற அணைத்து முயற்சியிலும் ஈடுபடுவார்கள். பெண்கள் உடை அணிவதில் அதிக மாற்றம் ஏற்படும், ஆண்கள் ஹேர் ஸ்டைல் மாற்றுவது, இரண்டு தினங்களுக்கு ஒருமுறை தாடி ட்ரிம் செய்வது என ஆளே மாறலாம். உடற்பயிற்சி கூடத் திடீரெனச் செய்யத் தொடங்கலாம். இது போன்ற மாற்றங்களைப் பார்த்தவுடனே உஷாராக வேண்டும்!

2. அன்பாகப் பேசி வந்த கணவர், திடீரெனச் சிடுசிடுவெனப் பேச தொடங்குவர், நீங்கள் செய்யும் சின்ன விஷயத்திற்குப் பெருமளவில் கோபப்படலாம். எப்போது உங்களைக் குறைகூறலாம் என்று காத்திருப்பர். உங்களுடனான நெருக்கத்தைக் குறைத்துக் கொண்டு, உங்கள் அழகை குறை சொல்வது, நீங்கள் கேட்கும் விஷயத்திற்கு எதிர்மறையாகப் பதிலளிப்பது என முழு வெறுப்பையும் காட்டலாம். அதேபோலப் பெண்கள், கணவன் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலளிக்காமல் சண்டைபோடுவது, தனது கள்ளக்காதலன் பற்றி மறைமுகமாக நல்லவிதத்தில் பேசுவது, உங்களுடன் குறைந்த நேரத்தை செலவிடவே யோசித்து நீங்கள் பேசிவரும் போதெல்லாம் எரிந்துவிழுவது போல நடந்துகொள்ளலாம். இவை அனைத்தும் உங்கள் மேல் விருப்பம் இல்லை என்பதை உணர்த்த அவர்கள் செய்யும் சித்து விளையாட்டுகள்!

Image result for illegal affair activities

3. எப்போதும் வெளிப்படையாக இருந்த உங்கள் துணைவர், திடீரென ரகசியமாக அனைத்தையும் செய்யத்தொடங்குவர். சாப்பிடும் போது போன் வந்தால், பக்கத்து ரூமிற்குப் போனை தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள். உங்கள் முன் போன் பேசும்போது, யாரிடம் பேசுகிறார்கள் என்று தெரியக்கூடாது என்பதற்காக, உங்களைப் பார்த்துப்பார்த்து நைசாகப் பேசுவார்கள். அதேபோல முன்பு அவர்களது போன் பாஸ்வர்டை உங்களிடம் சொல்லியிருப்பார்கள், ஆனால் இப்போது கேட்டல் "எதற்குப் பாஸ்வர்ட்" என்று உங்களைக் கேள்விகேட்பார்கள். நீங்கள் காரணத்தைச் சொன்னாலும், பாஸ்வர்டை சொல்லாமல் அவர்களே போனில் போட்டுத் தருவார்கள். அவர்கள் போனில் இருக்கும் மெசேஜ்களை உடனுக்குடன் டெலிட் செய்துவிடுவார்கள். இவர்களின் இப்படியெல்லாம் செய்யும்போதே நீங்கள் உஷாராகிவிட வேண்டும்!

Image result for illegal affair activities

4. வேறு பெண்மீது உங்கள் கணவருக்கு விருப்பம் இருந்தால், உங்களுடன் உடலுறவு கொள்வதை அதிகம் விரும்பமாட்டார். நீங்கள் என்ன மயக்க முயற்சித்தாலும், அதற்கு விருப்பமில்லாதது போல இருப்பார். ஒரு மனைவியாக உங்கள் கணவரின் நிலையைப் பற்றி உங்கள் உள்மனது சொல்லும் விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் கணவர் மீது அபரிவிதமான நம்பிக்கை இருந்தாலும், இதுபோன்ற விஷயங்களில் கவனம் தேவை.

Image result for illegal affair activities

5. உங்கள் கணவர் அடிக்கடி ஒருபெயரை மட்டும் திரும்பத்திரும்பப் பயன்படுத்துவர். அது யார் என்று கேட்டால், சமாளிப்பர். உங்களுக்கு அவர் மீது சந்தேகம் வந்துவிட்டது என்று தெரிந்ததும், உங்களிடம் அன்பாக இருக்கத் தொடங்குவர், பாசமாகப் பேசுவார். ஆனால் இந்தப் பாசம் அனைத்தும் உங்களிடம் போடும் வேஷமாகும். அவரது நடவடிக்கையை நீங்கள் சரியாகக் கவனிக்காவிட்டல், பிரச்சனை உங்களுக்குத்தான்!

Image result for illegal affair activities

Top