திரையரங்கு கட்டணங்கள்!!!
  • 15:06PM Nov 09,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 15:06PM Nov 09,2017 Chennai, Tamil Nadu 600003, India

தற்போதுள்ள சினிமாவில் மக்கள் திரையரங்குக் கட்டணம் அதிகம் என்பதால் சினிமாவுக்கு வருவதில்லை எனத் தியேட்டர்களின் மீது பழி போடுவதும், மக்கள் சினிமாவை தியேட்டரில் பார்க்காத காரணத்தால்தான் வேறு வழியின்றி விலையை ஏற்றுவதாகத் திரையரங்கு உரிமையாளர்களும் மாறி மாறிப் பழி போட்டுக் கொள்கின்றனர். தியேட்டரில் டிக்கெட் விலை எதனால் ஏற்றப்படுகிறது???

திரையரங்குகள் என்பது இலாபத் தொழிலாக இருந்த நிலை எல்லாம் மாறிவிட்டது. மல்ட்டிப்ளெக்ஸ்கள் பெருகி விட்ட காலகட்டத்தில் தனித் திரையரங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.  முதலில் மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குக்கு இணையான வசதிகளைசெய்தேயாக வேண்டிய கட்டாயம், அப்படிச் செய்யும் பணியில் ஏற்பட்ட கடன் சுமை. இரண்டாவது அளவு.  மல்ட்டிப்ப்ளெக்ஸ்களில் பெரும்பாலும் அளவான எண்ணிக்கைகளைக் கொண்டு இயங்குகிறது. ஆனால் பெரிய திரையரங்குகள் சிறிய மல்ட்டிப்ளெக்ஸகளின் தரத்தைப் பெரிய இடத்தைப் பெற்ற அவர்களது திரையரங்கில் கொண்டு வரும் போது சிக்கிக் கொள்கின்றனர். 

இரண்டாவது, மல்ட்டிப்ளெக்ஸகளில் வெரைட்டி கிடைக்கிறது. ஆப்ஷனும் இருக்கிறது.  இப்போது எனக்குப் பிடித்த படத்தினைப் பார்க்க எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லையென்றாலோ அல்லது மனம் மாறினாலோ அருகிலேயே மற்றொரு படத்தை தேர்வு செய்யும் வசதியும் கிடைக்கும்.  மற்ற இடங்களில் கிடைப்பது கடினம். 

ஒரு படத்தின் ஒரு ஷோ ஓட்ட அனைத்துச் செலவுகளும் சிறிய லாபமும் சேர்ந்து குறைந்தபட்சம் ரூபாய் 10,000 தேவைப்படும்.  நாலு ஷோ என்றால் அதற்கே ரூபாய் 40,000. ஜி.எஸ்.டி. க்குப் பிறகு இன்னமும் அதிகம்.  பெரிய நடிகர்களின் படங்கள் போடும்போது மட்டுமே கிடைக்கும் மிகை லாபம், பிற படங்களின் வெளியீட்டால் ஏற்பட்ட நஷ்டத்தை இதைக் கொண்டு தீர்த்துக் கொள்ளும் ஆசையை ஏற்படுத்துகிறது.  காரணம், வெளியிடும் தியேட்டர்களின் எண்ணிக்கை.  தமிழ்நாட்டில் 2,700 க்கும் அதிகமான திரையரங்குகள் உள்ளன.  இவற்றில் ஊருக்கு இரண்டு மூன்று தியேட்டர்களில் ஒரே படம் திரையிடப்படும். மொத்தமாக வாங்குவதன் மூலமாக மல்ட்டிப்ளெக்ஸகள் இதிலும் லாபம் பார்த்துவிடும். 

குறைந்து விட்ட மக்கள் கூட்டம், பல்வேறு திரையரங்குகளில் ஒரே திரைப்படம் எனத் திரையிடப்படும்போது, எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருப்பினும் அதிகபட்சம் பத்து நாட்கள்தான் வருமானம் ஈட்ட முடியும்.  இரண்டு மூன்று பேர் போட்டியிலிருப்பதால் அதிக விலைக்கு வாங்கும் உரிமையாளர்கள் அதை எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுக்க வேண்டும் என்பதால், இந்த க்ரே டிக்கட் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

இதனாலேயே இப்பொழுது பட வெளியீடுகள் வெள்ளிக்கிழமைகளிலேயே செய்யப்படுகிறது.  அதிக விலைக்கு டிக்கெட் விற்பது நிச்சயமாகத் தவறென்றாலும் இதற்கு சீக்கிரமே ஒரு சரியான தீர்வை அரசோ, தயாரிப்பாளர் சங்கங்களோ முன்னெடுப்பதுதான் நல்லது என்று கருதுகிறேன். ஏனெனில், எந்த விதத்திலும் உங்கள் முடிவுகளுக்காகவோ, நஷ்டங்களுக்காகவோ மக்கள் பணத்தை பதம் பார்ப்பது என்பது எந்த விதத்திலும் நியாயமல்ல…    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top