Exquisite

எந்த சலசலப்பும் இல்லாத ஒரு இடத்தில் உங்கள் காதலியுடன் ரொமான்ஸ் செய்ய விருப்பமா? அப்படியென்றால் இந்த இடத்தை நீங்கள் தேர்வு செய்து பார்க்கலாமே!

Jun 08 2021 07:03:00 PM

காதலர்கள் மட்டுமல்ல நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை கூட அழைத்துக்கொண்டு செல்லும் ஒரு அற்புதமான இடம் தான் துகேலா நீர்வீழ்ச்சியாகும். தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாசூலு நேட்டால் மாகாணத்தில் அமைந்துள்ள ரோயல் நேட்டால் தேசிய பூங்காவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

thukela-waterfalls south-africa

இந்த நீர்வீழ்ச்சி உலகின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாக அறியப்படுகிறது. ஐந்து படிகளாக விழும் இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் சுமார் 3110 அடிகளாகும். இது ஒரு சீசன் நீர்வீழ்ச்சியாகும். இங்கு மழைக்காலத்தில் தான் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காண முடியும். ஆண்டின் பிற்பகுதியில் இந்த அருவியில் விழும் தண்ணீரின் அளவு குறைவாகத்தான் இருக்கும். இந்த நீர்வீழ்ச்சியை மலையின் உச்சியில் சென்று நீங்கள் பார்க்க முடியும்.

thukela-waterfalls south-africa

மாண்ட் ஆக்ஸ் சோர்ஸஸ் என்றழைக்கப்படும் உயரமான மலைப்பகுதியில் இருந்து இந்த நீர்வீழ்ச்சி கீழ் நோக்கி கொட்டுகிறது. இந்த மலை உச்சியில் இருந்து 1350 அடி வரை தண்ணீர் எந்த வித தடைகளும் இல்லாமல் கீழ் நோக்கி பாய்கிறது. சுற்றுலா பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மிக அழகான இயற்கையால் சூழப்பட்டிருக்கும்.

thukela-waterfalls south-africa

மிகவும் உயரமான மலையில் இருந்து கொட்டும் இந்த நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்காக இந்த பகுதிக்கு வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். மிக அற்புதமான அனுபவத்தை தரும் இந்த துகேலா நீர்வீழ்ச்சி உங்கள் காதலியோடு நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத இடமாகும். கொரோனா முடிந்த பிறகு இங்கு வேண்டுமானால் டேட்டிங் சென்று பாருங்களேன்.