Timeless

விநோதமான பிறவியாக பிறந்து சரித்திரத்தையே புரட்டிப்போட்ட இந்த மனிதரை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

Apr 23 2021 02:47:00 PM

உலகெங்கிலும் பல வித்தியாசமான மனிதர்களை பார்த்திருப்போம். அவர்கள் அனைவரை விடவும் மிகவும் வித்தியாசமானவர் தான் பிரான்செஸ்கோ லென்டினி. இத்தாலி நாட்டை சேர்ந்த இவர் ஒரு சர்க்கஸ் கலைஞர் ஆவார். சர்க்கஸில் சாகசம் செய்வது இயல்புதானே வேறு என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா ?

three-leg-man

இவர் பிறக்கும் போதே 3 கால்களுடன் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா ? ஆனால் அதுதான் உண்மை. 3 கால்களுடன் பிறந்து வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். இவரது இந்த உடலமைப்பை பலரும் கேலி, கிண்டல் செய்து வந்தனர். இவரது ஊனத்தை சுட்டிக்காட்டி ஒதுக்கி வைத்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தனது வித்தியாசமான உருவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சரித்திரத்தில் இடம் பிடித்தார் பிரான்செஸ்கோ.

three-leg-man

இத்தாலியில் உள்ள ஒரு புகழ்பெற்ற சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து தனது திறமைகளை வெளிப்படுத்தினார். 3 கால்களில் நடந்து சர்க்கஸில் அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். சர்க்கஸில் செய்த சாகசங்கள் மூலம் பெரும் புகழை ஈட்டினார். இதுபற்றி ஒருமுறை அவர் கூறுகையில் வாழ்க்கை என்பது அழகானது. அதை நான் எப்போதும் குறை கூற மாட்டேன். நாம் தான் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று வாழ்க்கை தத்துவத்தை அழகான முறையில் வெளிப்படுத்தினார். அதற்கு தகுந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்தும் காட்டினார் இந்த அதிசயப்பிறவி.