தட்டில் இருப்பது என்னவென்று கண்டுபிடிங்க..?? பா.ஜ.கவின் சமயோஜன யுக்தி...!! வைத்து செய்யும் நெட்டிசன்கள்
  • 09:43AM Apr 13,2019 Thoothukudi
  • Written By AP
  • Written By AP
  • 09:43AM Apr 13,2019 Thoothukudi

7 கட்டங்களாக நடைபெறவுள்ள லோக்சபா எலெக்ஷன் மற்றும் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 21 தொகுதிகளுள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாகியுள்ளன..

மக்கள் சற்றும் எதிர்பார்க்காத கூட்டணி எல்லாம் நிகழ்ந்துள்ளது..தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி அறிந்த ஒன்றே..ஆனால் தே.மு.தி.க, பா.ம.க ,பி.ஜே.பி - அ.தி.மு.க உடனான கூட்டணி, என்னதான் யூகிக்க பட்ட ஒன்றாக இருந்தாலும் அரசியல் விமர்சகர்களுக்கு இது அதிருப்தி தான்..அடுத்ததாக இப்படி பரபரப்பாக உள்ள தமிழ்நாட்டு அரசியலில் ஒரு சில காமெடிகளும் நடக்கிறது.. பிரச்சாரம் என்ற பெயரில் கட்சிகளின் அலப்பறைகள் நெட்டிசன்களுக்கு நல்ல தீனி..

பிரச்சார கூட்டத்தில் மாம்பழ சின்னத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னம் என கூறுவது,வேட்பாளர் பெயரையே மறந்து மாற்றி கூறுவது, கூட்டணி வைத்திருப்பதே திராவிட கட்சியுடன் தான் என்பதை மறந்து பழக்க தோஷத்தில் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சார கூட்டத்தில் உளறுவது என அலப்பறைகள் எண்ணிடலங்கா..

அந்த லிஸ்டில் அடுத்ததாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட போடுபட்டி கிராமத்தில் பிரச்சார நிமிர்த்தமாக சென்ற தமிழிசையை வரவேற்க அங்குள்ள பா.ஜ.கவினர் இரட்டை இலையில் தாமரையை மலர வைத்து வரவேற்பளித்த நிகழ்வை தமிழிசை ட்விட்டரில் பாராட்டி பகிர்ந்திருந்தார்..

ஆனால் இங்கு உற்றுநோக்க வேண்டியது என்னவென்றால் தட்டில் இருப்பது தாமரை இல்லையாம், பெரிய வெங்காயத்தை தாமரை போல டெக்ரேட் செய்து வரவேற்றுள்ளனர்.மீம்ஸ் கிரியேட்டர்கள் சும்மாவே வைத்து செய்வார்கள் இப்போது சொல்ல வேண்டுமா..??

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top