தொலைந்து போன நண்பர்கள்
  • 00:23AM Dec 28,2018 Chennai
  • Written By gowri
  • Written By gowri
  • 00:23AM Dec 28,2018 Chennai

“என் பிரெண்ட போல யாரு மச்சான்.. அவன் ட்ரெண்டை எல்லாம் மாத்திவச்சான்...” இந்த பாட்டை கேக்கும் போது உங்களுக்கு நிறைய பேரு ஞபாகத்துக்கு வருவாங்க… அமாம், அவன் நம்ம கூட தெரு தெருவா டையர்வண்டி ஒட்டியவனா இருக்கலாம்..! இல்ல, மாஞ்சு மாஞ்சு பொண்ணை தேடி அலைஞ்சவனா இருக்கலாம்..! அவன் நம்ம கூட ஷேர் பண்ணி சாப்பிட்டவனா இருக்கலாம்..! இல்ல, கேர் பண்ணி பாத்துக்கிட்டவனா இருக்கலாம்..! அவள் நமக்காக ரெகார்ட் நோட் வரைஞ்சு கொடுத்தவளா இருக்கலாம்..! இல்ல, ரெகார்ட் பண்ண ஊக்கம் கொடுத்தவளா இருக்கலாம்..! இப்டி பலதரபட்டவனையும் நாம ஒன்னு சேர்த்து பிரெண்ட்ஸ்னு சொல்றோம்.. இதுல சிலர் நம்ம  லைப்ல எப்போதுமே இருப்பாங்க, ஆனால் சிலர் கொஞ்ச நாள் தான் வந்து இருப்பாங்க.. நிறைய மெமரி ஷேர் தந்திருப்பாங்க.. ஆனால், டச்ல இல்லாம போயிடுவாங்க.. அப்படிப்பட்ட பிரெண்ட்ஸ் எல்லாம் எப்புடி இருகாங்கனு யோசிக்குற ஒரு பதிவு தான் இது..

 

நாம ரொம்ப நாளா அவனை பார்த்துகிட்டே இருப்போம். அவன்கிட்ட பேசணும்னு இருப்போம். ஆனால் அவன் அமைதியே அவன்கிட்ட நம்மள சேரவிடாது. அவ்ளோ அமைதியா இருப்பான். அவன் யாருக்குடாவும் பேசாட்டாலும், எல்லாரும் பேசுறதை சிரிச்ச முகத்தோடு கேட்டுகிட்டு  ரசிச்சிகிட்டு இருப்பான். ஒரு நாள் அவன் பேசுறதை கேக்குற சந்தர்ப்பம் வரும். அவன் பேசியது நம்ம மனசுல ஒரு நல்ல பதிவாயிருக்கும். ஆனால் அவன் நம்ம கூட டச்ல  இருக்கமாட்டான்.

 

ஆபீஸ்ல நாலு பேரு இருந்தாங்கன்னா நடுவுல அவன் சத்தம் தான் இருக்கும்.ஏன்டா, எப்பப்பாரு இப்புடி பேசியே கொல்லுறன்னு சொல்லி அவன்கிட்ட முகத்தை திருப்பிகிட்டு போயிருப்போம். அவன் சிரிப்பா பேச ட்ரை பண்ணாலும் மொக்கை போடாதடானு சொல்லி கலாய்ச்சுஇருப்போம். ஒருநாள், அவன் ஆபீஸ் விட்டு போயிருப்பான், அப்போ யோசிப்போம், எந்த டாபிக் பேசினாலும் அவன் சொன்ன எதாவுது ஞபாகம் வரும். ஆனால், அவன்கிட்ட பேச நமக்கு ஞபாகம் வராது.

 

ஏதோ கோர்ஸ் படிக்கும்போது, இல்ல  தற்காலிகமா ஒரு இடத்துல கொஞ்ச நாள் வேலை பார்க்கும்  போது, நம்ம நிழல் மாரி கூடவே சுத்திகிட்டு இருப்பான். டீ குடிச்சதுல இருந்து கொடைக்கானலை சுத்தி பார்த்த வரைக்கும் சந்தோசமா பகிர நிறைய விஷயங்கள் இருக்கும்.அந்த டைம்ல நமக்கிருந்த கஷ்டத்துல இருந்து, இஷ்டப்பட்டு பார்த்த படம் வரைக்கும் எல்லாமே ஒரு ரீள்போல ஓடும். ஆனால், அந்த கொஞ்ச கால நட்பு இப்போ நெஞ்சோரத்துல மறைஞ்சு போயிருக்கும்.

 

facebook -லையும்  போன் காண்டாக்ட் பிரென்ட் லிஸ்ட்ல இருப்பான். ஆனால், பிரெண்ட்ஸ் குரூப் மீட்டிங்க்ல மிஸ்ஸாவான். கோவா பிளான்னாலும்  மெரினா பிளான்னாலும் வரவும் மாட்டான், வரேன்னு சொல்லவும் மாட்டான். அவனுக்குனு ஒரு கடமையிருக்கும், அதை நோக்கிய பயணத்துல, எல்லாரையும் விட்டுட்டு தனித்து போயிருப்பான்;பணம் ஈன்றுகொண்டு இருப்பான். அவன் வலியை உணர்ந்து வழி அனுப்பி வைத்துஇருப்போம்.

 

அந்த எக்ஸாம் அண்ணிக்கு காலைல அவன் சொல்லி கொடுத்ததால தான் கிலீர் பண்ணன். நாங்க காலேஜ் டூர் போனதுக்கு முழு முயற்சி எடுத்தது அவன்தான்.ஒருநாள் ECR-ல  போலீஸ்கிட்ட மாட்டினப்போ அவுங்க அப்பா சொல்லி தான்விட்டாங்க.சென்னை வந்த புதுசுல அவன் ரூம்ல தான் கொஞ்ச நாள் தங்கிருந்தேன். என நம்மிடம் ஏதோ ஒரு சமயத்தில் நண்பனாய் பயணித்து இருப்பான். ஆனால் பயன்பாட்டில் இருக்கமாட்டான்.

 

இப்படி நம்மிடம் தொலைந்து போன நண்பர்கள் நிறையபேர் உண்டு.அவர்களை புதிப்பித்து கொள்ளுங்கள். இரண்டாம் அத்தியாயத்தை எழுதுங்கள்.

You Might Also Like These
Related Stories
Top