Think to Speak: அசத்தும் இந்திய மாணவர்!!!
  • 15:09PM Apr 09,2018 Chennai, Tamil Nadu, India
  • Written By KV
  • Written By KV
  • 15:09PM Apr 09,2018 Chennai, Tamil Nadu, India

MIT – உலக அளவில் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று. Massachusetts Institute of Technology, அமெரிக்காவில் இளங்கலை படிக்கும் அர்னவ் கபூர் என்ற இளைஞரின் தலைமையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய சாதனம் தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. நாம் மனதில் நினைக்கும் வார்த்தைகளை இதனால் கண்டுபிடித்துச் சொல்ல முடியும். இது ஆரம்ப கட்டம்தான் என்றாலும், பின்னாளில் மனதில் உள்ளதை நேரடியாகக் கணினியில் பதிவது போன்ற பல்வேறு பயன்களுக்கு இது உறுதுணையாக இருக்கும் என்பது நிதர்சனம்.

சரி, இது எப்படிச் சாத்தியமானது என்பதைப் பார்ப்போம். தாயோடு ஒட்டு முகத்தில் ஒட்டிக் கொள்ளும் ஒரு சிறிய சாதனம் இது. இது நம் முகத்தில் உள்ள முக்கியமான நரம்புகளோடு இணைந்து கொண்டு Neuro-Muscular Signals எனப்படும் தசை மாற்றத்தைப் பதிவு செய்யும். இது இதனுடைய Database-ல் இருக்கும் அதே போன்ற சிக்னல்களுடன் அதை ஒப்பிட்டு அந்த வார்த்தையைக் கண்டுபிடித்து ஒலிக்கச் செய்யும். இதன் Accuracy என்று பார்த்தால் 92% என்பது நிஜமாகவே ஆச்சரியப்படக் கூடிய விஷயம்தான்.

ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற Chess விளையாட்டில், எதிரணியில் இருப்பவரின் நகர்வை அமைதியாக யாருக்கும் தெரியாமல் பெற்றுக் கொண்டு, அதே வழியிலேயே கணினியும் பதில் அனுப்பியிருக்கிறது. வாயைத் திறந்து பேச வேண்டிய தேவை இல்லையென்பதால் சுற்றியுள்ள யாருக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியாது. ஆச்சரியமாக இருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள கணவன் மனைவி சண்டை போடும் போது இதுபோன்ற கருவி இருந்தால் வாயால் பேசவே வேண்டியதில்லை. சப்தமே வெளியில் கேட்காமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள முடியும்.       

தசைகளின் செயல்பாட்டினை வைத்து வார்த்தைகளை ஒலிக்கச் செய்யும் ஆராய்ச்சிகள் கிட்டத்தட்ட 19ம் நூற்றாண்டிலிருந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. 1950-லிருந்து தீவிரமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வந்தாலும், தற்போதுதான் அது சாதனம் என்ற நிலையை எட்டியுள்ளது. முகத்தின் ஒவ்வொரு தசைகளிலும் கிட்டத்தட்ட 16 இடங்களில் Electrode-களைப் பொருத்தி அதன் மூலம் கிடைத்த Data-வை ஆய்வு செய்து நம்பகமான 7 இடங்களைத் தேர்வு செய்து, தற்போது அதன் மூலமாக இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறார் இந்த இந்திய மாணவர்.

எனினும், ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுபவர் குறித்த பதிவுகள் கணினியில் பதிவு செய்த பிறகேஅதாவது அவருடைய Neuro-Muscular Signal-கள் Map செய்த பிறகே இயக்க முடியும். இதனை இன்னமும் எளிமைப்படுத்த இன்னும் நிறைய Database வேண்டியிருக்கிறது என்றாலும், கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் ஒரு ஆராய்ச்சியை வெற்றிகரமாக்கியவர் ஒரு இந்தியர் என்பதில் நாம் பெருமை கொள்ளத்தான் வேண்டும்!!!

Top