நல்லது செய்யறதுக்கு முன்னாடி...
  • 04:55AM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 04:55AM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India

நான் கோவைக்கு அருகில் உள்ள ஒரு சிற்றோரிலிருந்து இதை எழுதுகிறேன்சில வருடங்களுக்கு முன்னால் என் அண்ணன் - பெரியப்பா மகன் திருமணத்திற்குச் சென்னை வந்திருந்த பொழுது நடந்ததுஉதவி செய்வதில் தவறில்லை, ஆனால் என்ன செய்கிறோம் என்பதை யோசித்துச் செய்ய வேண்டும் என்பதை எனக்குப் புரிய வைத்த நிகழ்வு இதுதிருமணத்திற்காக உறவினர்கள் அனைவரும் சென்னை வந்திருந்தோம்நெருக்கமான சிலர் மட்டும் நான் உட்பட,அவர்கள் வீட்டில் தங்க மற்றவர்கள் அருகில் உள்ள பிளாட்டில் தங்க வைக்கப் பட்டனர்

அடுத்த நாள் வீட்டில் அனைவரும் நகை, துணிகள் வாங்க வெளியே போக, எனக்கு மூட் இல்லாத காரணத்தால் போகவில்லைஅபார்ட்மெண்ட் வீடு, கதவைத் திறந்து வைத்தால் எதிர் வீட்டுக் கதவு தெரியும்கொஞ்ச நேரம் கழித்து எதிர் வீட்டு வாசலில் ஒரு பெண் வந்து நின்று Bag ல் எதையோ தேடி பதற்றமடைந்தால்.  சுற்றும் முற்றும் பார்ப்பது, கீழே போவது, மேலே வருவது என்று கொஞ்ச நேரம் கதை நடக்க அதற்கு மேல் பொறுக்க முடியாமல் என்னவென்று விசாரித்தேன். அந்தப் பெண்ணின் பெற்றோர் அவசர வேலையாக ஊருக்குப் போக வேண்டி இருப்பதால், காலையே கிளம்பிப் போனதாகவும் அவளுடைய சாவி உள்ளே மறந்து வைத்து விட்டதாகவும் சொல்லிப் புலம்பினாள்அது பூட்டு கூட இல்லை, ஆட்டோமாட்டிக் லாக் வேறுஇதற்குள் மேல் வீடு, கீழ் வீடு என்று கூட்டம் சேர்ந்தது.

கதவை உடைத்து உள்ளே போக எல்லாரும் முடிவு செய்ய, சுலபமான வழி இருக்கிறதா என்று அருகே சென்று பார்க்க, அந்தக் கதவில் கண்ணாடியைக் கதவுடன் பொருத்தும் ரீபெர் வெளியே இருந்தது தெரிந்தது. அங்கே நின்றிந்தவர்களிடம் கேட்டு ஒரு பெரிய screwdriver வாங்கி, அந்த ரீபெர் கட்டையை நெம்பி வெளியே எடுத்து கண்ணாடியை கழட்டி உள்ளே கை விட்டு கதவைத் திறந்து விட்டேன். எல்லாரும் ஒரு மாதிரிப் பார்க்க, நான் அதைக் கவனிக்காமல் உள்ளே வந்து விட்டேன். அதற்குப் பிறகுதான் ஆரம்பித்தது வினை. வீட்டிற்கு வந்த பெரியம்மா சற்று வெளியே செல்ல, சற்று நேரத்தில் திரும்பி வந்து என்னிடம் உனக்கு எதுக்கு வேண்டாத வேலை என்று கடிந்து கொண்டார்கள். எனக்குப் புரியவில்லை... நல்ல கதவு எதுக்கு ஓடைக்கணும்னு ஹெல்ப் பண்ணினேன் என்று சொல்ல, நீ ஊர்ல என்ன பண்ணிட்டு இருக்கேன்னு கேக்குறாங்க என்று சொல்ல எனக்குக் கடுப்பாகி விட்டது.

இதில் பெரிய கூத்து ஒரு வருடம் முன்னால் என் அண்ணனுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்ற போது, அந்தப் பெண்ணின் அம்மா நான் யார் என்று கேட்க - அண்ணன் என் பெயரைச் சொன்னதும் அந்த அம்மா, ஓ அந்தப் பையனா என்று கேட்டு என்னை ஒரு தினுசாகப் பார்க்க, பேசாமல் எழுந்து வந்துவிட்டேன்உதவி செய்யணும்னு நினைச்சது ஒரு தப்பு, அதுக்காக என்ன செய்யறோம்னு யோசிக்காம செஞ்சது ரொம்பத் தப்பு... பேசாம இருந்திருந்தா எனக்கு மரியாதையாவது மிஞ்சி இருக்கும்... அதுல இருந்து, இப்போல்லாம் உதவின்னு கேட்டா ஒரு தடவைக்கு பத்து தடவை யோசிச்சுட்டுத்தான் செய்யறது... 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top