#PregnantWomen: கர்பமா இருக்கற பெண்கள் இதையெல்லாம் செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருங்க..!
  • 11:23AM May 25,2019 Chennai
  • Written By Charulatha
  • Written By Charulatha
  • 11:23AM May 25,2019 Chennai

ஒவ்வொரு பெண்ணும் கர்பம் தரித்துக் குழந்தையைப் பெற்றெடுப்பது மறு ஜென்மம் எடுப்பதற்குச் சமம் என்பது மறுக்கமுடியாத உண்மை. அப்படிப்பட்ட காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் மட்டுமே குழந்தை பெர்றேடுக்கும் போது தாயையும் சேயும் நலமாக இருக்க முடியும்.அப்படி பட்ட காலங்களில் பெண்கள் செய்யும் சிறு தவறுகள் கூட அவர்களுக்குப் பெரிய பிரச்சனையாக வந்து நிற்கும்.அப்படி கர்பமா இருக்கற பெண்கள் இதையெல்லாம் செய்யறதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருங்க.

Image result for pregnant women

#1. கர்பமா இருக்கும் பெண்கள் நீராவி குளியல்,சூடான நீரில் குளிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.ஏனென்றால் சூடான நீரில் குளிக்கும் போது கருப்பைச் சூடாகி கரு களைய கூட வாய்ப்புள்ளது.

#2. கர்ப்பகாலத்தில் உடலை கட்டுக்கோப்பாக வயித்துக்குள்ள பெண்கள் அதிகளவு உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள்.அதில் தவறில்லை,ஆனால் அளவிற்கு மீறிய உடற்பயிற்சியில் ஈடுபடும் போது பெண்களின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 160 தாண்டுகிறது.இதனால் குழந்தைக்குச் செல்லும் பிராணவாயுவின் அளவு குறைந்து குழந்தைக்கு மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

#3. கர்ப்ப காலத்தில் அதிகளவு X-ray எடுப்பதை முடிந்தளவு தவிர்த்து விடுங்கள்.அப்படியும் எடுக்க வேண்டுமென்றால் X-ray எடுக்கும் போது அடிவயிற்றுப் பகுதி கதிர் வீச்சுகளால் தாக்கப்படாதவாறு, மூடிக் கொண்டால் குழந்தை பாதுகாப்பாக இருக்கும்.

#4. கர்பிணிகள் முடிந்த வரை நீண்ட நேரம் தொடர்ந்து நிற்பதை தவிர்த்து விடுங்கள்.இல்லையெனில் உங்கள் உடலில் உள்ள நீர் வீக்கம் அடைந்து, திரவத்தின் அசாதாரணச் சேர்க்கை போன்றவை உங்கள் ஏற்படலாம்.எனவே அதிக நேரம் உட்காருவது அல்லது தூங்குவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

#5. மன அழுத்தம் சாதாரணமாகவே யாருக்கும் வரக்கூடாது,இதில் கர்பிணி பெண்கள் முடிந்தவரை அழுத்தம் இல்லாத சூழலில் இருங்கள்.இல்லையெனில் உங்களின் நலனை மட்டுமின்றி உங்கள் குழந்தையின் நலனையும் கெடுத்துவிடும்.

#6. கர்பிணிகள் கர்ப்பகாலத்தில் காலத்தில் புகை பிடிப்பதை முடிந்த அளவிற்குத் தவிர்த்து விடுங்கள்.இல்லையெனில் உங்களுக்குக் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகப் பிரசவ வலி ஏற்பட்டு, குறைப் பிரசவம் கூட ஏற்படும்.

#Pregnancy என்று வந்துவிட்டால் பெண்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று பலர் கூறுகின்றனர்.ஆனால் உண்மையில் பெண்களின் ஆரோக்யத்தைப் பாதுகாப்பதில் ஆண்களும்  சம பங்காற்றவேண்டும்.

Top