திருடர்களுக்கு பெப்பே காட்டும் புதிய பேக்பேக்!!!
  • 06:35AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 06:35AM Sep 15,2017 Chennai, Tamil Nadu 600003, India

பஸ்லயோ டிரெய்னலயோ போறப்போ என்னதான் பேக்பேக்கை முதுகுல மாட்டியிருந்தாலும், கவனம் பூரா நம்ம முதுகுலதான் வச்சிட்டு வர வேண்டியிருக்கும். எவன் கூட்டத்துல பேக்ல இருந்து எதை திருடுவானோங்கிற பயம் இருந்துட்டேதான் இருக்கும்.   கம்பெனி லாப்டாப், பர்ஸ், ஐடி கார்டுன்னு நமக்கு ரொம்ப முக்கியமான பொருளையெல்லாம் வச்சுகிட்டு பத்திரமா ஆபீஸ் போறதுக்குள்ள…

அதுக்கெல்லாம் பதிலாத்தான் இப்போ மார்க்கெட்ல புதுசா ஒரு பேக்பேக்கை விட்ருக்காங்க… Anti-Theft USB Charging Travel Backpack… இதோட பெரிய ஸ்பெஷாலிட்டியே இது மத்த பேக் மாதிரி வெளிப்புறம் ஜிப் வைக்காம, நம்ம முதுகோட ஒட்டின மாதிரி வச்சிருக்கறதுதான்.  கேட்கிறதுக்கு சின்ன விஷயம் மாதிரித் தெரிஞ்சாலும், டெய்லி பயத்தோட சுமந்துட்டு போறவங்களுக்குப் புரியும், எவ்வளவு சௌகரியம்னு…

இது மட்டும் இல்லை, பேக்காட வெளிப்பகுதில ஒரு USB சார்ஜிங் சப்போர்ட் வேற குடுத்திருக்காங்க… இனிமேல உங்க மெமரி பேக்க பேக்குல எங்க வச்சோம், எடுத்தோமா இல்லையா – இந்த மாதிரி கவலையே வேண்டியது இல்லை… அதே மாதிரி பார்க்கிறதுக்கு காம்பேக்டா தெரிஞ்சா கூட, இதுக்குள்ள லேப்டாப், சாவிகள், டேப், பர்ஸ், பேனான்னு எல்லாத்தையும் வச்சுக்க முடியும்.

Water Proof. அதனால மழை வருமா வராதா, ஓரமா நிக்கனும் இந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை.  அதுக்காக ஸ்விம்மிங் பூல்ல தூக்கிப் போட்டு விளையாடினா நான் பொறுப்பில்லை.  இது தவிர, Travel card அல்லது பஸ்பாஸ், ட்ரெயின் டிக்கெட். ஆதார் கார்டுன்னு எல்லாத்தையும் Shoulder Strap-லயே வச்சுக்க முடியும்கறதால தொலைஞ்சிடுமோங்கற டென்ஷனும் இல்லை, டக்னு எடுக்க வேண்டி வந்தா கவலையும் இல்லை.

மொத்தத்துல. பேக்காட நாமளா இதைத் தொலைக்கிற வரைக்கும் வேற யாராலும் இதுல இருந்து ஒரு பொருளையும் எடுக்க முடியாது.  இப்போதைக்கு 3,800 கிட்ட விலையில விற்பனைக்கு வந்திருக்கிற இந்த பேக், சீக்கரமே Trend ஆகத்தான் போகுது…  

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top