#Brain: நீங்கள் செய்யும் ஒன்றாவது இந்த லிஸ்டில் இருக்கா? உங்கள் மூளைக்கு நீங்களே எமன் - கொஞ்சம் கொறச்சுக்கங்க பாஸ்!
  • 14:28PM Aug 14,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:28PM Aug 14,2019 India

தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் சில செயல்களின் காரணமாக மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த உடம்புக்குமே அது தான் கண்ட்ரோல் யூனிட்டா இருக்கும் போது, அதுக்கே பிரச்சனை என்றால் நமது உடலின் நிலையை யோசித்து பாருங்கள். முடிந்த வரைக்கும் அடுத்து சொல்லப்படும் விசயங்களை கவனித்தில் கொண்டாலே மூளை பாதிப்புக்கு முக்காடு போட்டுவிட்டு அடுத்து வேலையை மனநிறைவாக பார்க்கலாம்.

#1. மது அருந்துவது தான் மூளையை பாதிக்கும் மிக முக்கியமான செயல். தண்ணி அடிச்சா கல்லீரல் போயிரும், குடல் போயிரும்னு சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மது அருந்தும் போது உண்டாகும் போதை, நரம்பு மூலம் கடத்தப்பட்டு மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது. அதனால் தான் மதுவின் போதை அதிகமானால் நிதானத்தை இழக்க நேரிடுகிறது.

#2. மொபைல்போன் வைத்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில், கைப்பேசியின் கதிர்வீச்சினால் மூளை பாதிக்கப்படுகிறது என்பது உறுதியாகிவிட்டது. நம்முடைய மூளை மின்னலைகள் மூலம் செயல்படுவதால், அவைகளை செல்போன் கதிர்வீச்சு பாதிக்கும்.

#3. பெரும்பாலும் மொபைல்போனில் தொடர்ச்சியாக நாம் பேசும்போது காது பாதிக்கப்படுகிறது. அதன்மூலம் 'கேட்டல்' எனும் அமைப்பானது சிதைவடைகிறது. இது மூளையின் முன் பகுதியில் அமைந்துள்ளது.

#4. அடுத்தது, துர்நாற்றங்களை முகர்ந்து பார்க்கும் பொழுது, அவை நமது மூளையின் ஒரு பகுதியை பாதிப்படையச் செய்து மூளையின் செயல்பாட்டை குறைக்கிறது.

#5. நாம் கமகமன்னு மணக்க உபயோகிக்கின்ற வாசனை திரவியங்களும் மூளையை பாதிப்படைய செய்கின்றன. இவையெல்லாம் நமக்குத் தெரிந்தே அல்லது தெரியாமல் நம்முடைய மூளையை பாதிப்படைய செய்யும் செயல்பாடுகளாகும்.

#6. இரவு உறங்குவது தாமதமாகவே உறங்குகிறோம். தூக்கம் கண்ணை கட்டும் வரை இரவு 1 மணி ஆனாலும் விடுவதில்லை. இந்த பழக்கம் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கண்களின் மூலம் செல்லும் பார்வை நரம்புகள் மூளை சென்றடைகின்றன.

#7. தொலைக்காட்சி, லேப்டாப், இணையத்தின் வாயிலாக பெறப்பட்ட விளையாட்டுகளை இரவு முழுவதும் கண்விழித்து விளையாடுதல் இவையெல்லாம் மூளையை பாதிப்படைய செய்கிறது.

#Brain: நம்முடைய உடலுக்கு எது தேவை என அறிந்து, அதற்கேற்றவாறு இந்த செயல்களை மேற்கொண்டால் அது மூளையை பாதிக்கும் அளவை குறைக்கலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றபடி நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும் | #CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா?

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top