23 உயிர்கள் பறிபோன பின்பும் தேனியில் மேற்கொள்ளப்படும் விபரீத முயற்சி..? சரிவில் சிக்கும் அபாயம்..!
  • 15:48PM Feb 12,2019 Theni
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 15:48PM Feb 12,2019 Theni

your image

 

தேனி மாவட்டம், குரங்கனி அருகே கொழுக்கு மலையில் இருந்து திப்பெடா மலையை நோக்கி சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பற்ற முறையில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் எழுதியுள்ள கடிதத்தில்,

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணியில் இருந்து கொழுக்கு மலைக்கு சுற்றுலாப் பயணிகள் மலையேற்றப் பயிற்சிக்குச்சென்று வந்தனர். அதே போல, கேரளத்தில் இருந்து சூரியநெல்லி வழியாக கொழுக்குமலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜீப்களில் சென்று வந்தனர்.

சூரியநெல்லி வழியாக கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள் அங்கிருந்து குரங்கணி வழியாக நடை பயணமாக தேனி மாவட்டத்தை வந்தடைவது வழக்கம்.இந்த நிலையில் குரங்கனியில் இருந்து கொழுக்குமலைக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்கள், அங்கிருந்து திரும்ப வரும்போது கடந்த 2018, மார்ச் 11-ஆம் தேதிஒத்தை மரம் என்ற பகுதியில் காட்டுத் தீயில் சிக்கினர்.

இதில்,மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றிருந்த 23 பேர் பலியாகினர். இதையடுத்து குரங்கனி-கொழுக்குமலை இடையே மலையேற்றப் பயிற்சிக்குச் செல்ல தமிழக வனத் துறைதடை விதித்துள்ளது.

ஆனால், கேரளா சூரியநெல்லியில் இருந்து கொழுக்குமலைக்கு சுற்றுலா பயணிகள் வழக்கம்போல சென்று வருகின்றனர். சூரியநெல்லியில் இருந்து கொழுக்குமலைக்குச் செல்வதற்கு கேரள சுற்றுலாத் துறை சார்பில் அனுமதி பெற்ற தனியார் ஜீப்கள் இயக்கப்படுகின்றன. கொழுக்குமலையில் இருந்து 15 கி.மீ.,தூரத்தில் தமிழக வன எல்லையில் உள்ளது திப்பெடா மலை.

இங்கிருந்து மேகக் கூட்டங்கள் தவழும். மேற்குத் தொடர்ச்சி மலைமுகடுகளின் எழில்மிகு காட்சி, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் காட்சி ஆகியவற்றை காணலாம்.

விடுமுறை நாட்களில் ஓரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் திப்பெடா மலைப் பாதையில் இடநெரிசலில் நடந்து செல்வதால் மலையில் இருந்துசறுக்கி விழுவதற்கு வாய்ப்பும், மண் மற்றும் பாறை சரிவில்சிக்கும் அபாயமும் உள்ளது.

எனவே, தமிழக எல்லையில் உள்ள கொழுக்குமலை-திப்பெடா மலை இடையை சுற்றுலாப் பயணிகள் ஆபத்தானபயணம் மேற்கொள்வதை தடுப்பதற்கு வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share This Story

முருகானந்தம்

Top