ட்ரெண்டாகும் புதிய பஞ்ச் “நான் போட்ட கையெழுத்து என்னுதில்லை…”
  • 22:12PM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 22:12PM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India

RK நகர் தேர்தல் உள்ளிருப்பவர்களுக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறதோ என்னவோ, வெளியே இருப்பவர்களுக்கு என்டர்டெயின்மென்ட் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.  இதில் நிறைய பஞ்ச் டயலாக்குகள் பிரசித்தம் என்றாலும், தற்போது ஒரு பஞ்ச் பரபரப்பாகிக் கொண்டு வருகிறது.  நடிகர் விஷால் அவர்களது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம்.  அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது தீபன், சுமதி ஆகிய இருவரும் விஷாலை முன்மொழிந்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இருப்பது தாங்கள் கையெழுத்தில்லை என்று சொன்னதுதான்.

இதனிடையே விஷால் மனம் தளராமல் மீண்டும் மேல் முறையீடு அது இது என அலைந்ததோடல்லாமல், மீடியாவில் அந்த இருவரையும் காணோம் என்று வேறு புகார் தெரிவித்தார்.  இதையடுத்து, குறுகிய காலத்தில் பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டிய தேர்தல் அலுவலர், நேற்று அதை விட முக்கியமான ஒரு விசாரணை வீடியோவை வெளியிட்டிருந்தார்.  அது தீபன், சுமதி ஆகிய இருவரும் தாங்கள் கையெழுத்திடவேயில்லை என்றும், அந்தப் படிவத்தில் இருப்பது அவர்களது கையெழுத்தேயில்லை என்றும் தெளிவுபடுத்தியது போல எடுக்கப்பட்டிருந்தது.

அந்த வீடியோவிலும் கூட தீபன் உளறியதுதான் மேலே சொன்ன பஞ்ச். அதுதான் மிட்நைட் சாட்டிங்கில் இரண்டு மணி நேரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.  நாளை நிச்சயமாகச் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக வலம் வரலாம் இந்தப் பஞ்ச். “எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை” போன்ற பிரபலமாகப் பேசப்பட்ட பஞ்சுகளை மண்ணைக் கவ்வ வைத்த அந்த ஒரு பஞ்ச்

“நான் போட்ட கையெழுத்து என்னுடையதில்லை…”

விஷால் இதனை தன்னுடைய ட்விட்டரில் ஜனநாயகத்தின் இன்னொரு கேலிக்கூத்து என்று தலைப்பிட்டு இதனைப் பகிர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இதனைக் கோட் வேர்டாகப் பயன்படுத்திக் கொள்ள ஸ்லீப்பர் செல்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். வாழ்த்துகள்….  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top