#ARREARS: நாடாளுமன்றத் தேர்தலில் WASH-OUT – சட்டமன்றத் தேர்தலில் 9 தொகுதிகள்!!! ARREARS அறிவிப்பால் ஓட்டை மாற்றிக் குத்திய அரசு ஊழியர்கள்!!!
  • 15:54PM May 23,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:54PM May 23,2019 Chennai

காலையில் இருந்து தேர்தல் முடிவுகளைத் தீவிரமாகக் கவனித்து வருபவர்களுக்கு, குழப்பத்தை ஏற்படுத்தியது ஒரே ஒரு விஷயம்தான். அது, நாடாளுமன்றத் தேர்தலில் முழுக்க WASH-OUT ஆகி, கிட்டத்தட்ட 2 தொகுதிகளில் மட்டும் வென்ற அதிமுக, எப்படி சட்டமன்ற இடைத் தேர்தலில் காலை நிலவரப்படி கிட்டத்தட்ட சரிசமமான நிலைக்கு வந்தார்கள் என்பதுதான்.  இந்த ஐந்து வருடங்கள் என்பதை விடவும், கடந்த இரண்டு வருடங்களாக அதிமுக கிட்டத்தட்ட பாஜகவின் கைப்பாவையாகவே இருந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சுடு சம்பவங்கள், பொள்ளாச்சி சம்பவம் போன்றவற்றினால் எல்லாம் மக்கள் தங்கள் ஒட்டுமொத்த வெறுப்பைக் காட்டியும், எப்படி இத்தனை வாக்குகள் துவக்கத்தில் சாத்தியப்பட்டது என்பதற்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது அரசு அதிகாரிகள், ARREARS பாக்கி திருப்பித் தரப்படும் என்ற அதிமுகவின் அறிவிப்பால்தான் இப்படி ஒரு முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுவதுதான். இந்த விஷயம் மக்களிடையே சற்று அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

காரணம் இல்லாமல் இல்லை. தொடர்ச்சியாகத் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டதும், புறக்கணிக்கப்பட்டதும் தெரிந்தும், தேர்தல் ஆணையம் என்ற பெயரில், ஒரு தரப்பு அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்தை ஏற்படுத்தி வந்தது. இதனால் மக்கள் கடுப்பாக இருக்கும் இந்த நேரத்தில், ARREARS பணத்திற்காக, வாக்குகளை மாற்றிச் செலுத்தியுள்ளார்கள் அரசு அதிகாரிகள் என்ற வதந்தி வேறு இன்னும், கடுப்பேற்றியுள்ளது. நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நமக்கு வரவேண்டியது கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள் போல என்று முணுமுணுக்க ஆரம்பித்துள்ளார்கள். நிஜம்தானா???

Top