பள்ளியில் பயின்ற விஷம்!!!
  • 09:02AM Nov 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 09:02AM Nov 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

நான் தற்போது சென்னையில் ஒரு private கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்என் சிறு வயதில் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு சம்பவம்... காலையில் உடற்பயிற்சிக்காக ஸ்கூல் கிரௌண்டுக்கு செல்வது வழக்கம்அப்போது ஒரு நாள் டிரௌசர் போட்ட ஒரு நபர் அங்கே சில பசங்களுக்கு ஏதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்நானும் அருகே சென்று பார்த்தேன்என்னுடன் படிக்கும் சில மாணவர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள்நான் அருகே போக, சிலர் என்னைப் பார்த்து கையசைக்க அந்த டிரௌசர் போட்ட ஆள் என்னை அருகில் அழைத்து என்னைப் பற்றி விசாரித்தார். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாலும் ஏதோ வில்லங்கம் என்று புரிந்ததுஇருந்தாலும் ஆர்வம் காரணமாக, என் வீட்டைப் பற்றிப் பெரிதாக ஏதும் சொல்லாமல் இருந்து விட்டேன்.

பயிற்சி ஆரம்பமானது... இந்தியாவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஆரம்பித்தார் அந்த மனிதர். குருஜி என்று அனைவரும் அவரை அழைத்துப் பேச, நானும் அப்படியே கூப்பிட ஆரம்பித்தேன். முதல் பயிற்சியே இந்தப் பக்கம் பத்து பேர், அந்தப் பக்கம் பத்து பேர் சேர்ந்து நடுவில் ஒடுபவனை அடிக்க முயற்சிக்க வேண்டும். ஒவ்வொருவராக நடுவில் அடிப்படாமல் ஓட வேண்டும்...  இப்படித் துவங்கியது. நடுவில் நமது கடவுள்கள் பற்றியும், இந்துவாக இருப்பதன் பெருமையையும் பற்றியும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்மற்ற சிறுவர்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. கிட்டத்தட்ட பயிற்சி முடியும் தருவாயில், வெளியே கூட்டிப் போய் ஆறு அல்லது மணல் பாங்கான இடங்களில் இன்னமும் உடலை வலுவாக்கும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது... இடையிடையே பிரம்மச்சரியம் பற்றிய மூளை சலவைகளும்...

பயிற்சி முடிந்ததாக அறிவிக்கப்பட்ட அன்று குருஜியிடம் நான் சில கேள்விகள் கேட்டேன்அதற்கு அந்த குருஜி பதில் சொல்லத் தடுமாறினார். பின்னர், என்னைப் பற்றி பேசிய மாணவர்கள் சிலரை அழைத்து என்னை அழைத்து வந்ததற்குக் கடிந்து கொண்டார். காரணம், நான் கேட்டது பெரியார் பற்றி... என் குடும்பத்தில் என் தந்தை, மாமா, அவர்களது நண்பர்கள் என நிறைய கருப்புச் சட்டைக்காரர்களை நான் கிட்டத்தட்ட தினமும் கண்டிருக்கிறேன்.  அவர்கள் பேசும்போது கேட்ட அனுபவம் நிறைய... அதனால் எனக்குள் விழுந்த கேள்விகளைத்தான் அன்று அவரிடம் கேட்டேன்.  அன்றிலிருந்து மற்ற யாரும் என்னுடன் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மற்றவர்களுக்குக் கட்டளையிட்டார் குருஜி. என் கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியாமல் போனதே எனக்கு மட்டுமல்ல, வேறு சிலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.  அன்றோடு நானும், இன்னும் சிலரும் அந்தப் பக்கம் செல்வது கூட இல்லை. 

தற்போது என்னுடன் பயிற்சியில் கலந்து கொண்ட சிலரை நான் காண நேரிட்ட பொழுது,  நான் அதிலிருந்து வெளியே வந்தது எவ்வளவு நல்லது என்று புரிந்தது.  ஏன் என்ற காரணங்கள் வெளியே சொல்லுமளவு இல்லை என்பதால் எழுதவில்லை. வெளியே வந்ததற்குக் காரணம் பெரியார் கொடுத்த பகுத்தறிவு என்பதை நான் என்றளவும் மறக்கவும் மாட்டேன், மறக்கவும் முடியாது.  இப்பொழுதும் சில வேளைகளில் அதிகாலை செல்லும் பொழுது நிறையப் பள்ளிகளில் இப்படிப்பட்ட பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  இது போன்ற வகுப்புகளில் என்ன சொல்லித் தருவார்கள் என்று எனக்குத் தெரியும் என்பதால், ஏதாவது செய்தாக வேண்டும் என்று இதனை எழுதுகிறேன்.  இனியேனும் விழித்தெழுங்கள்...

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top