எல்லாக்கட்சிகளும் தே மு தி க உடன் கூட்டணி வைக்க ஆசைப்படுவது ஏன் ?
  • 08:22AM Mar 07,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 08:22AM Mar 07,2019 Tamil Nadu

எல்லாக்கட்சிகளும் தே மு தி க உடன் கூட்டணி வைக்க ஆசைப்படுவது ஏன் ?

201903070116018896_In-ADMK-coalitionDMDK-inside-outside-shaking_SECVPF.gif

விஜயகாந்த் தமிழ் திரைப்படத்தில் பிரபலமான நடிகர் அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு இந்த சூழ்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு தே மு தி க ஆரம்பிக்கப்பட்டது அப்பொழுது கடவுளோடும்  மக்களுடன் மட்டுமே எனது கூட்டணி வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்ற விஜயகாந்தின் அறிவிப்பு மக்களை கவர்ந்தது,

 

 

தே மு தி க வின் பலம் என்ன பலவீனம் என்ன என்று எதுவும் தெரியாத நேரத்தில் ஒரு சில இடங்களில் தே மு தி க போட்டியிடும் என்று அரசியல் காட்சிகள் எதிர்பார்த்தனர் ஆனால் 232 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு அனைவர்க்கும் அதிர்ச்சி அளித்தார் விஜயகாந்த்,

 

ப ம க வின் கோட்டை என்று சொல்லப்படும் விருத்தாசலத்தில் பலரது அறிவுரை மற்றும் எதிர்ப்பையும் மீறி விஜயகாந்த் போட்டியிட்டார், தே மு தி க போட்டியிட்ட 232 தொகுதியில் அவர் மட்டுமே வெற்றிபெற்று அவரை எதிர்த்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் அவரது கட்சி, ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஓட்டுகளைப் பெற்றிருந்தது. இது பதிவான வாக்குகளில் 8.4 சதவீத வாக்குகளாகும்.ஒரு ஆண்டுக்கு முன் துவக்கப்பட்ட கட்சி என்று பார்க்கும்போது இது அந்தத் தருணத்தில் மிகப் பெரிய சாதனையாவே இருந்தது.,

1551341200-7412.jpg

 

அதன் பின்னர் வந்த 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட முடிவுசெய்த தே.மு.தி.க. நாற்பது தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்தத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறாவிட்டாலும், ஒட்டுமொத்தமாக 31 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. பதிவான வாக்குகளில் இது 10.3 சதவீத வாக்குகளாகும்.

 

எண்ணிக்கையில்  வெற்றி ஏதும் இல்லாவிட்டாலும் தே.மு.தி.கவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்துவந்தது, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கியபோது, தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தார் ஜெயலலிதா. அதுவரை கடவுளோடும் மக்களோடும்தான் கூட்டணி என்று கூறிவந்த விஜயகாந்த் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க ஒப்புக்கொண்டார்.

 

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.கவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.அதிமுகவில் இவளவு தொகுதிகள் யாருக்கும் இதுவரை ஒதுக்கியது இல்லை, விஜயகாந்த் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைந்தது நல்ல முடிவு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின. தே.மு.தி.க. 29 இடங்களையும் 7.9 சதவீத இடங்களையும் கைப்பற்றி மாநில  கட்சி அந்தஸ்து பெற்றததோடு மட்டுமல்லாமல் கட்சி  தொடங்கி சிறிது காலத்திலேயே சட்ட சபை எதிர்க்கட்சி தலைவரானார் விஜயகாந்த்,

இப்படி ஏறுமுகமாக சென்ற தே மு தி க வின் வளர்ச்சி 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இருந்து இறங்குமுகமானது அதுவே 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் இக் கட்சி ஒரு இடத்தில கூட வெற்றி பெற முடியவில்லை  அக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் 2.41 சதவீதமாகக் குறைந்திருந்தது. அதாவது அக்கட்சி வெறும் 10 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. கட்சி துவங்கிய இரண்டாவது ஆண்டிலேயே தனித்துப் போட்டியிட்டு 27 லட்சம் வாக்குகளைப் பெற்ற அக்கட்சிக்கு இது மிகப் பெரிய சரிவாகும்,

511-1210x642.jpg

தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு பிரதான கட்சிகளுமே தே.மு.தி.க தங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டுமென நினைத்தன. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பா.ஜ.கவும் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால், மத்திய ஆளும் கட்சி - மாநில ஆளும் கட்சி என இருவிதங்களிலும் ஆளும்கட்சிக்கு எதிரான மன நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் மறைந்துவிட்ட நிலையில், வலுவான கூட்டணியின் மூலம் மட்டுமே இதைச் சாதிக்க முடியுமென நினைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி. இதன் காரணமாகவே பாட்டாளி மக்கள் கட்சியை 7 மக்களவை இடங்களையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் அளித்து கூட்டணிக்கு இழுத்தது. பா.ஜ.கவுடனும் கூட்டணி இறுதிசெய்யப்பட்டது.  தே.மு.தி.கவுடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தியது.

 

இந்த சூழ்நிலையில் தி மு கவும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை இறுதிசெய்து விட்டு  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், உடனடியாகச் சென்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசினார்,

 

 அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய தலைவராக விஜயகாந்தை நினைக்கிறது அ.தி.மு.க. மேலும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் தே.மு.தி.கவும் இருந்தால் வட மாவட்டங்களில் டிடிவி தினகரனால் ஏற்படும் சேதத்தை சரிசெய்ய முடியுமென அக்கட்சி கருதுகிறது.

 

ஆனால், 2011ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறாத  தலைவர் உடல்நலம் குன்றியுள்ள, வாக்கு வங்கியை வெகுவாக இழந்துள்ள தே.மு.தி.க. கட்சி எந்த அளவுக்கு பூர்த்திசெய்யுமென்பது மக்கள் கைகளில் தான் உள்ளது  பொறுத்திருந்து பார்ப்போம் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு !!!.

Share This Story

துரை முருகன்

Top