கொய்யா மூட்டையில் கிடந்த அழுகிய சடலம், கொடூரமான சாவு..!! உல்லாசத்தின் விளைவு இன்று உப்பாற்றுபாலத்தில் அம்பலம்..
  • 09:37AM Nov 15,2018 Chennai, Tamil Nadu, India
  • Written By AP
  • Written By AP
  • 09:37AM Nov 15,2018 Chennai, Tamil Nadu, India

தாராபுரத்தில் உள்ள நஞ்சியாம் பாளையத்தில் உப்பாற்றுபாலத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி அன்று சாக்குமூட்டையில் கட்டப்பட்டு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து போலீசார் விசாரணையில், மூட்டையில் கிடந்த சடலம் முத்துலட்சுமி என்பதும் முருகன் என்பவரது மனைவி தான் இந்த முத்துலட்சுமி என்பதும்,இவருக்கு 45 வயது இருக்கக்கூடும் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட முத்துலட்சுமியின் தங்கை கணவர் வேலுச்சாமி தானே முன்வந்து கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

விசாரணையில்வேலுச்சாமி , தான் குடும்பத்துடன் கவுந்தப்பாடியில் உள்ளதாகவும்,தனது மனைவி அக்காளான முத்துலட்சுமிக்கும் தனக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறியுள்ளார். முத்துலட்சுமியை உல்லாசத்துக்கு அழைக்கும் போது,பேரன், பேத்திகள் வந்துவிடவே இனி இது போன்ற தவறுகளுக்கு தான் ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என மறுத்துள்ளார் முத்துலட்சுமி. இதனால் ஆத்திரம் முற்றவே முத்துலட்சுமியை கடத்தி,கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துள்ளார் வேலுச்சாமி . பின்னர் இவர் கொய்யா வியாபாரம் செய்வதால்,சாக்கில் உடலை கட்டி உப்பாற்றுபாலத்தில் வீசியுள்ளார்.

Top