Misc

படத்தில் காட்டுவதைவிட ரொம்ப பிளான் பண்ணி திருடி இருக்காங்க! இவங்கள எப்படி போலீஸ் கண்டுபிடிச்சுருப்பாங்க?

Sep 17 2021 03:47:00 PM

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தஞ்சாவூர் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த கார்கள் திருடு போயுள்ளது. ஒரு சிறு தடயம் கூட இல்லாத அளவிற்கு அந்த திருடர்கள் கைவரிசை காட்டியிருந்தனர். அந்த நேரத்தில் யாருடைய வீட்டிலும் சிசிடிவி கேமரா வசதிகள் அதிகம் பயன்பாட்டில் இல்லை.

tanjore continous car missing

கிட்டத்தட்ட 70 கார்களை சில மாதங்களில் இந்த திருடர்கள் திருடியுள்ளனர். காவலர்களின் கணிப்பின்படி இதை செய்வது ஒரே குரூப் தான் என்பதை மட்டும் தெளிவாக கண்டுபிடித்துவிட்டார்கள். கடைசியாக ஒரு வீட்டில் கார் திருடும்போது ஒட்டுமொத்த கும்பலும் மாட்டிக்கொண்டார்கள். இவ்வளவு பிளான் பண்ணி திருடுன ஆட்கள் எப்படி மாட்டுனாங்க தெரியுமா?

tanjore continous car missing

அந்த வீட்டுக்கு பக்கத்தில் ஒரு சிசிடிவி கேமரா இருந்துள்ளது. ஆனால் திருட வந்த அனைவரும் முகமூடி போட்டிருந்ததால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னாடி சீட்டில் உக்காந்திருந்த திருடன் மட்டும் திருட வந்ததில் இருந்து திரும்பி செல்லும்வரை செல் போன் உபயோகப்படுத்திக்கொண்டே இருந்தான். அந்த செல்போன் எண் உபயோகப்படுத்திய டவரை வைத்து அடையாளம் கண்டுபிடித்துவிட்டனர்.

tanjore continous car missing

அதுக்கு அப்புறம் அந்த குரூப்பில் இருந்த எல்லாரையும் காவல்துறையினர் கை*து செய்துள்ளனர். இவங்க மொத்தம் 70 வாகனங்களை திருடியுள்ளனர். வி*பத்தில் அடிபட்ட ஒண்ணுக்கும் ஆகாத கார்களை அடிமட்ட விலைக்கு வாங்கி அந்த வண்டியின் உண்மையான பேப்பர்களை இந்த திருடிய வாகனத்துடன் இணைத்து விற்பனை செய்வதற்காக இப்படி தினமும் திருடியுள்ளனர். எப்படியெல்லாம் பிளான் பண்ணி திருடுறாங்க பாருங்க.

tanjore continous car missing