#TAMILHISTORY: தமிழர்களின் வரலாற்றைச் சொல்ல இன்னுமொரு இடம்!!! இரண்டாவது கீழடியாக மாறுகிறதா தாமிரபரணி???
  • 20:47PM Sep 23,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:47PM Sep 23,2019 Chennai

இன்றைய தேதியில் தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் மொத்தமும் இருக்கும் தமிழர்கள் கொண்டாடும் ஒரு VIRAL விஷயம் என்று பார்த்தால் அது கீழடிதான். கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழின் அடிப்படை எழுத்து வடிவமான பிராமி கண்டெடுக்கப்பட்டதில் இருந்து, தமிழரின் பண்பாடு, மொழி, கலாச்சாரம் போன்ற பலவற்றின் மீது வரலாற்றின் வெளிச்சம் படியத் துவங்கியுள்ளது. அதோடு திராவிடக் கலாச்சாரமும், தமிழ்க் கலாச்சாரமும் ஒன்றுதான் என்ற உண்மையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திராவிட மொழிக் குடும்பங்களின் மீது ஒரு தெளிவான பார்வை கிடைக்க கீழடி ஒரு காரணமாக மாறிவிட்டது. சரி, தமிழர்களின் நாகரீகம் கீழடியில் மட்டுமா என்ற கேள்விக்கு, அழுத்தமான விடையும் தற்போது கிடைத்துள்ளது.

கீழடி போலவே, திருச்செந்தூர் அருகே தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் குறித்து, தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் எனப் புதிதாகக் கோரிக்கை எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த ஆத்தூர் - முக்காணி தாமிரபரணி ஆற்றுப்பகுதியில், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டியர் காலத்து அரண்மனை தூண்கள், சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதைப் பற்றியும் ஆய்வு நடத்தினால், இன்னும் நிறைய விஷயங்கள் தெரிய வரலாம் என்று சுற்றுவட்டாரத்தைச் சார்ந்தவர்கள் ஆர்வத்துடன் தெரிவிக்கிறார்கள். கீழடியிலேயே இன்னும் பெரும்பாலான அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தோண்டி பகுதிகளிலேயே இன்னும் முழுமையாகத் தோண்டி எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தாமிரபரணியிலும் அதே போன்ற பழங்காலச் சிற்பங்கள் பற்றி தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்லைக்கழகத்தின் புவிசார் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் பிரத்தியேக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் சிங்கம், யானை உள்ளடங்கிய யாழி சிற்பங்கள், சிங்க முக சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தோண்டத் தோண்ட கிடைக்கும் பொக்கிஷங்களால் தாமிரபரணி ஆற்றுப்பகுதி மற்றொரு கீழடியாக உருவெடுத்துள்ளது என்று அவர்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலர் செல்லமாக, இந்தப் பகுதியை இரண்டாம் கீழடி என்றும் சொல்லி வருகிறார்கள். உண்மையில், கீழடியில் நடந்ததைப் போல, அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, CARBON DATING முறையில் அதன் காலகட்டம் கணக்கிடப்படும் வரையில் பொறுமை காப்போமாக!!!

Foreign Tamil Movie Review  |  Tamil Rockers  |  Keeladi Report  |  Ancient Tamilnadu Politics  |  Aatirambakkam Excavation  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top