Lushgreen

தன்னை விட வயதில் மூத்தவருக்கு தாயாக மாறிய நடிகை! நம்ம ஊருல மட்டும்தான் இந்தக் கொடுமையெல்லாம் அரங்கேறணுமா?

Sep 13 2021 03:37:00 PM

நம்ம ஊருல நமக்கே தெரியாம சில சிறப்பான சம்பவங்கள் எல்லாம் நடந்துகிட்டு இருக்குங்க.ஏதோ கடமைக்கு திரைப்படம், சீரியல் இதெல்லாம் பார்க்கக்கூடாது. அதுல நடிக்கிறவங்க பத்தி முழு தகவலையும் தெரிஞ்சிகிட்டா நீங்க தெறித்து ஓடிப்போயிடுவீங்க. அப்படி ஒரு சூப்பரான சம்பவத்தை இன்னிக்கு உங்ககிட்ட சொல்லப்போறேன்.

thamilum-saraswathiyum meera-krishnan

தொலைக்காட்சியில் சீரியல் பார்க்காத பெண்மணிகள் எந்த வீட்டிலாவது இருக்க முடியுமா? எங்க வீடும் இதுக்கு விதி விலக்கு கிடையாது. மாலை 7 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை சீரியல் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும். அதையெல்லாம் முடிச்சிட்டு தான் சோறு, தூக்கம் இதெல்லாம் பத்தி யோசிப்பாங்க.

thamilum-saraswathiyum meera-krishnan

தெரியாத்தனமா ஒருநாள் வேலைக்கு போயிட்டு சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டேன். சரி வேற வழியில்லையே என்று நானும் ஒருநாள் சீரியல் பாக்க உட்கார்ந்தேன். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் சூப்பரா இருக்குதுன்னு அக்கம் பக்கத்துல எல்லாம் பேசிக்கிட்டாங்க. அப்படி என்ன அந்த சீரியலில் இருக்கிறதென்று அன்று தான் தெரிந்து கொண்டேன்.

thamilum-saraswathiyum meera-krishnan

அந்த சீரியலில் பலருக்கும் பிடித்த கதாபாத்திரம் கோதை. பொறுப்பான தாய் கதாபாத்திரம். தான் படிக்கவில்லை என்றாலும் தன்னுடைய விடாமுயற்சியால் தொழிலில் வளர்ச்சி பெற்றதுடன் குடும்பத்தையும் பொறுப்புடன் நிர்வகிக்கும் ஒரு தாய் தான் கோதை. இந்த கோதை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மீரா கிருஷ்ணன் திறமையான நடிகையாக உள்ளார்.

thamilum-saraswathiyum meera-krishnan

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதை படம் பிடித்து காட்டும் அளவுக்கு நடிப்பில் வெளுத்து வாங்குகிறாரே என்று அவரைப்பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள நினைத்தேன்.இவர் கேரளாவில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்து சீரியல்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவருக்கு 34 வயதாகிறது. ஆனால் அவுங்க நடிக்கும் கதாபாத்திரத்தின் வயது 50 வயதை கடந்த கதாபாத்திரம் போல இருக்குதே என்று நீங்க கேட்கலாம்.

thamilum-saraswathiyum meera-krishnan

இவுங்களோட கெட்டப் அந்த வயது கதாபாத்திரத்தை கூட அப்படியே உள்வாங்கி பிரதிபலிக்கிறது. நயன்தாராவை விட வயசுல சின்னவங்க அவுங்க அம்மாவா நடிக்க வைத்தால் கூட அப்படியே கச்சிதமா பொருந்திடுவாங்க என்று தான் தோன்றுகிறது. இதுல ஹைலைட்டான விஷயம் என்னவென்று தெரியுமா? இவருக்கு மகனாக நடிக்கும் தீபக்கிற்கு 41 வயதாகிறது.

thamilum-saraswathiyum meera-krishnan

தன்னை விட வயதில் மூத்தவருக்கு ஒருசிலர் திரைப்படங்களில் அம்மாவாக நடித்துள்ளதை பார்த்துள்ளோம். சீரியலில் கூட இந்த கலாச்சாரம் வந்துள்ளது மிகவும் ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. ஒன்னு மட்டும் பாராட்டப்பட வேண்டிய விஷயமுங்க. தன்னை விட வயதில் மூத்தவர் மற்றும் தன்னுடைய சக வயது நடிகர்களுக்கே தாயாக நடிக்கிறாங்களே அதுக்காக இந்த கோதை அம்மாவுக்கு ஒரு சல்யூட் போட்டே ஆகணும்.