Lushgreen

தாலி என்பது பெண்களுக்கான வேலியா? அல்லது பெண்களை அடிமைப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு சாதனமா? கட்டவிழ்க்கப்பட்ட முடிச்சு ரகசியம்!

Sep 12 2021 08:40:00 AM

நேற்றைய தினம் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வுக்கு சென்று இருந்தோம் முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் அனைவரின் முகத்திலும் ஒரு வித சந்தோசம் கலந்த புன்முறுவல். கொரோனா பாதிப்புகளையும் கடந்த திருமண நிகழ்வானதால் பாதுகாப்பு நடவடிக்கைகளும் சற்று கடுமையாக இருந்தது. அனைவரும் ஆனந்தமாக இருந்த அந்த வேலையில் பெண்ணின் முகம் மட்டும் சற்று பதட்டத்துடன் காணப்பட்டது. ஒரு வழியாக கெட்டிமேள சத்தத்துடன் மங்கள நாண் (அது தாங்க தாலி) கழுத்தில் கட்டப்பட்டது. அதன் பிறகே மணமகளின் முகத்தில் ஒருவித புன்னகையை காண முடிந்தது.

thali-tamil tamilnadu tamil-wedding tamil-culture

இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? நானும் அப்படி தான் எண்ணினேன், ஆனாலும் ஏதோ ஒருவித கேள்வி தோன்றவே, அதனை அவர்களின் உறவினரிடம் கேட்க அவரோ, "அது என்னவோ தெரியல, எல்லாம் இன்னைக்கு மட்டும் தான் இப்படி இருப்பாங்க. அப்புறம் எல்லாமே மாறிடுவாங்க", என்று கிண்டல் செய்ய, எனக்கோ சிரிப்பை விட இதற்கான பதிலை தேடியே மனம் சென்று கொண்டு இருந்தது. அதாவது பொதுவாக ஆடி பாடி ஆனந்தமாகவும், குறும்பு தனமாகவும் இருக்கும் சுட்டிப்பெண்கள் கூட தாலி கழுத்தில் ஏறியதும் முற்றிலும் மாறி விடும் காரணம் என்ன?, பெண்களை கவர தவிக்கும் எவ்வளவோ ஆண்களுக்கு மத்தியில் இந்த தாலி மட்டும் எவ்வாறு அவர்களை ஒட்டு மொத்தமாக மாற்றுகிறது? 

thali-tamil tamilnadu tamil-wedding tamil-culture

அப்போது தான் அங்கு இருந்த வயதான ஒரு நூலகத்தை காண முடிந்தது (அது தாங்க திருமண வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த சுமங்கலி பெண்கள்). அவர்களை தனிமையில் சந்தித்து உரையாடிய போது, உண்மையில் இந்த சிறிய கயிற்றுக்கு பின்னல் இவ்வளவு விசயமா என்று வியப்படைய செய்தது அவர்களது பதில்.

thali-tamil tamilnadu tamil-wedding tamil-culture

அதாவது இருமனம் இணைவது தான் திருமணம் என்பார்கள், அந்த திருமண உறவின் ஆதாரமாக இருப்பது இந்த மங்கள நாண். அது எவ்வாறு என்றால், ஒரு ஆண்  கையினால் கட்டப்படும் இந்த தாலி பெண்களுக்கான பொறுப்புகளை உணர்த்தும் முக்கிய அடையாளமாக உள்ளது என்கிறார்கள். சுமங்கலி பெண்கள் மகாலக்ஷ்மியின் அங்கமாகவே இருப்பதாக கருதப்படுகிறது. தாலியணிந்த பெண்கள் மட்டுமே நமது நாட்டில் முக்கியமான மங்கள நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். நல்ல நிகழ்வுகளுக்கோ அல்லது வேறு ஏதும் சுப காரியங்களுக்கோ சுமங்கலி பெண்களை பார்த்துவிட்டு செல்லும்போது அந்த காரியம் நிச்சயமாக நடைபெறும் என்பது நமது முன்னோர்களின் பாரம்பரியமாகவே இன்றும் உள்ளது.

thali-tamil tamilnadu tamil-wedding tamil-culture

அது சரி தாலி என்பது ஏன் கட்டும் வகையில் வைக்கப்பட்டுள்ளது? அதனை ஆபரணம் போலவே உபயோகிக்கலாமே என்ற கேள்வி அடுத்து உருவானது. மற்ற அபாயங்களை விட இது திருமணமான பெண்ணுக்கு மிக முக்கியம். குறிப்பாக அதில் போடப்பட்டு இருக்கும் ஒவ்வொரு முடிச்சுக்கும் அர்த்தம் உள்ளதாம். முதல் முடிச்சு கணவனுக்கும், இரண்டாம் முடிச்சு அந்த குடும்பத்துக்கும் மற்றும் மூன்றாம் முடிச்சு அந்த சந்ததிக்கும் சம்பந்தப்பட்டதாக கூறினார்கள். உண்மையிலேயே இது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

thali-tamil tamilnadu tamil-wedding tamil-culture

அது மட்டுமல்லாமல் பெண்ணின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள தாலிக்கயிறு உண்மையில் அவர்களுக்கான வேலி தான். எப்படியென்றால், ஆண் எப்போதும் நேர் பார்வை கொண்டவன், தலை குனிந்து நடப்பது என்பது அரிதான பழக்கம். அப்படி இருக்க எதிர் வரும் பெண் திருமணம் ஆனவளா என்று அவளது கழுத்தில் இருக்கும் தாலிக்கயிறு தான் தெரியப்படுத்தும்.

thali-tamil tamilnadu tamil-wedding tamil-culture

அது மட்டுமல்லாமல், பெண்களுக்கு எப்போதும் அவர்களின் தாலி மீது மிகவும் மரியாதையை அதிகம். தாலியை மதிக்கும் பெண்கள், கட்டாயமாக அதனை கட்டியவரையும் அதில் போட்டு இருக்கு முடிச்சு ரகசியங்களையும் அறிவார்கள். எனவே அவளது கணவரையும் அந்த குடும்பத்தையும் கட்டிக்காக்கும் பெரும் பொறுப்பு உள்ளதை உணர்த்தும் சாதனமாக அது உள்ளது. அதனால் தான் அதனை கட்டியவுடன் பெண்களுக்கு அவர்களின் பொதுவான தனி வாழ்க்கையை விடுத்தது, பொறுப்புகள் நிறைந்த குடும்ப வாழ்க்கைக்குள் வருகிறாள். அது தான் அவளது இயற்கை குணத்தை மாற்றி விடுகிறது என்று கூறி முடித்தார்கள். பிறகென்ன, இதில் இவ்வளவு விஷயம் இருப்பதை தெரிந்து கொண்ட திருப்தியுடன் நன்கு சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்