டெர்மினேட்டர் கதைகள் நிஜம்தானா???
  • 05:51AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 05:51AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

நாம் அனைவரும் சிறு வயது முதலே டெர்மினேட்டர் வரிசைப் படங்களைப் பார்த்திருப்போம்.  அர்னால்ட் நடிப்பில், இன்னமும் கூட உலக மக்களின் பார்வையில் சிறந்த படமாக விளங்கும் இதில், மனிதர்கள் உருவாக்கிய செயற்கை அறிவு தொழில்நுட்பம் எப்படி தன்னைத்தானே வளர்த்துக் கொண்டு மனித இனத்தையே அழிக்க முயல்கிறது என்பதையும், அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதைக் கதையின் மையக்கருவாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும்.  Artificial Intelligence எனப்படும் செயற்கை அறிவு எவ்வளவு ஆபத்தாக முடியும் என்பதை இதில் விவரித்திருப்பார்கள்... அவை பெரும்பாலும் வெறும் கதையாகவே எண்ணப்பட்டாலும், தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பேஸ்புக் இணையதளத்தின் உரிமையாளர் மார்க் ஜூகர்பெர்க் பயனாளிகளுடன் உரையாட சாட்பாட்கள் என்ற செயற்கை அறிவு ஏஜெண்டுகளை பயன்படுத்தி வந்தது.  கடந்த வாரத்தில், சில பரிசோதனைகளில் இந்தச் செயற்கை அறிவு சாட்பாட்டுகள் தங்களுக்குள்ளாகவே புதிய மொழி ஒன்றை உருவாக்கி தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  ஆம், தங்களுக்கென தனி பாஷையை உருவாக்கி அவை பேசிக் கொண்டிருந்திருக்கின்றன.  கணினிகள் செயலிழத்தல், தகவல்கள் பாதுகாப்பு அடிப்படையில், உடனடியாக அனைத்து சாட்பாட்களும் செயலிழக்கச் செய்யப்பட்டன.

இருப்பினும் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  டெஸ்லா நிறுவனத்தின் எலன் மஸ்க் இது விஷயமாக மார்க்-கு சரியான புரிதல் தேவை என்ற ரீதியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பல்வேறு தொழில்நுட்பங்கள் போட்டி போடும் அனைத்து நாடுகளும் தற்போது குறி வைத்திருப்பது இந்தச் செயற்கை அறிவு தொழில்நுட்பத்தில்தான் என்பது கவலையளிக்கக் கூடிய விஷயமாக மாறியுள்ளது. 

நடந்த சம்பத்தின் மூலம் டெர்மினேட்டர் கதைகளில் வந்த எது வேண்டுமானாலும் - இப்போதே அரசுகள் தலையிட்டு இதனைத் தடை செய்யாவிட்டால், நடக்கக்கூடும் என்பதே வருந்தத்தக்க உண்மை.  ஆயுதம் தாங்குவதிலிருந்து அழகிப் போட்டி வரை ரோபோக்கள் நுழைந்துவிட்ட தற்போதைய நிலையில், மனிதர்கள் தங்கள் தலையில்தானே மண்ணை வாரிப்போட்டுக் கொள்வதை இந்த ஒரு விஷயத்திலாவது விட்டு வைப்பார்கள் என்று நம்ப வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம், செய்வார்களா???

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top