#Tension : தலையே வெடிக்கிற அளவுக்கு டென்சன் ஆகுதா.? உங்க உள்ளங்கை போதுமே.!
  • 15:51PM Jun 07,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 15:51PM Jun 07,2019 India

இன்னைக்கு உலகத்தோட வேகத்துக்கு ஈடு கொடுக்க எல்லாரும் ஓடிகிட்டே இருக்கமே தவிர, மனநிம்மதிக்குனு சொல்லி எதையுமே பண்றது இல்ல. இப்போ ஓடி ஓடி சம்பாரிக்கற காசு ஒரு நாள் செலவாகி தான் போகும். கடைசியா மிச்சம் மீதி இருக்கறது நினைவுகள் தான். அத சேத்து வைக்க கொஞ்சமாவது மனசுக்கு இடம் தரனும். வெறும் வேலை, பணம் மட்டுமே வாழ்க்கையா இருக்க கூடாது. அப்படி ஓடி ஓடி, இன்னைக்கு 30 வயசுலயே பிரஷர்னு சொல்லி மாத்திரை சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாத்துக்கும் காரணம் இந்த மன அழுத்தம் தான். இறுக்கமான சூழ்நிலையில நம்மள தள்ளிக்கிட்டு நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கோம். மன அழுத்தம் வரும் போது ஓரளவுக்கு நம்மள கட்டுபடுத்திக்க முடிஞ்சுதுனாலே பாதி பிரச்சன முடிஞ்ச மாதிரி தான்.

#1. நம்ம உடம்புல ஒவ்வொரு இடத்துக்கும், ஒவ்வொரு செயல்பாடு இருக்கு. அதெல்லாம் நரம்புகள் மூலம் இணைஞ்சிருக்கு.

#2. உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம்.

#3. மனஅழுத்தம் வரும் சமயத்துல உள்ளங்கை தான் நமக்கு அத கட்டுப்படுத்துற ரிமோட் மாதிரி செயல்பட போகுது.

#4. எப்போ எல்லாம் மனம் இறுக்கமா இருக்குற மாதிரி தோணுதோ அப்போ கட்டை விரலுக்கு கீழே இருக்க சதை பகுதிக்கு அழுத்தம் கொடுக்கறது மூலமா மன அழுத்தம் உருவாகுறத குறைக்கலாம்.

#5. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.

#6. உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது.

#Tension : இந்த மாதிரி உடம்புல சில பகுதிகள் இருக்கு, அத தான் வர்மா புள்ளிகள்னு சொல்லுவாங்க. இதுக்கு அழுத்தம் கொடுக்கறது மூலமா, அதுக்கு சம்பந்தப்பட்ட உறுப்புகளோட செயல்பாட தூண்டிவிட முடியும்.

Share This Story

முருகானந்தம்

Top