#WATERSCARCITY: தண்ணியெல்லாம் எங்கே போச்சு??? உங்க AREA-ல தண்ணி வரலைன்னா என்ன பண்ணனும் தெரியுமா???
  • 17:42PM Jun 20,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:42PM Jun 20,2019 Chennai

ஆற்றில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீரையெல்லாம், BOTTLE போட்டு அடைத்து வைத்து, WATER BOTTLE, COOL DRINKS, BEER, DRINKS என்று SHOWCASE-ல் வைத்து விட்டு – தற்போது நிலத்தின் மேலும், அடியிலும் தேடிக் கொண்டிருக்கிறோம். அதிலும், இந்த வருடம் சென்னையில் 40 வருடங்களுக்கு முன் வந்த வறட்சி போல, மொத்தமாகத் தண்ணீர் இல்லாமல் தவிக்க வைத்துவிட்டது. இது இனி வரும் காலங்களில் இன்னமும் மோசமாகும் என்றாலும், ஆளுந்தரப்போ இதை எப்படிச் சரி செய்வது என்று புரியாமல் தவித்து வருகிறது.

  

தற்போது இந்தப் பிரச்சினையை ஓரளவுக்காவது சமாளிக்கும் பொருட்டு, சென்னைக் குடிநீர் வாரிய கண்காணிப்பு அலுவலர் ஒருவர், ஒவ்வொரு பகுதியிலும் நியமிக்கப்பட்டிருக்கிறார். உங்கள் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்பான குறைபாடுகளை, கீழ்க்கண்ட MOBILE NUMBER-களில், உங்கள் பகுதியைச் சேர்ந்த நபரைத் தொடர்பு கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சென்னைக் குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

அந்த MOBILE NUMBER-கள் இதோ: திருவொற்றியூர் - 81449 31000, மணலி - 81449 05905, மாதவரம் - 81449 03903, தண்டையார்பேட்டை - 81449 45000, ராயபுரம் - 81449 02902, திருவிக நகர் - 81449 07907, அம்பத்தூர் - 81449 06906, அண்ணா நகர் - 81449 01902, தேனாம்பேட்டை - 81449 34000, கோடம்பாக்கம் - 81449 04904, வளசரவாக்கம் - 81449 89000, ஆலந்தூர் - 81449 30999, அடையாறு - 81449 23000, பெருங்குடி - 81449 30989, சோழிங்கநல்லூர் - 81449 31010. முன்னேற்பாடுகளைச் செய்யாமல் விட்டுவிட்டு தற்போது போராடிக் கொண்டிருப்பதன் பயன் என்ன என்று கேட்கத் தோன்றினாலும், இந்த அளவுக்காவது முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது. நன்றி!!!

Water Crisis Solution  |  Beauty with Multani Mitti  |  Artificial Rain  |  Benefits of Tender Coconut  |  Water in Mars  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top