Misc

கோவில்களில் ஏன் 12 வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடக்கிறது? அஷ்டபந்தன குடமுழுக்கு விழா என்று அழைக்கிறார்களே அது ஏன் என்று தெரியுமா?

Sep 15 2021 06:31:00 PM

தமிழ்நாட்டில் பல கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலிலும் பல தெய்வீக சக்திகளும் நம்பிக்கைகளும் பொதிந்துள்ளன. கோவில்களுக்குள் உள்ள சிலைகளுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அஷ்ட பந்தன மருந்தை மாற்றும் நடைமுறை உள்ளது. அது என்ன அஷ்ட பந்தன மருந்து? அஷ்டபந்தன மருந்து 12 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுவதன் நோக்கம் என்ன ஆகியவற்றை இன்று நாம் சற்று விளக்கமாக பார்க்கப்போகிறோம்.

ashta-panthana-maha-kumbabishegam

ஒரு கோவிலைக் கட்ட ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பது முதல் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும், என்ன நடக்க வேண்டும் என்பது வரை பல விதிகள் உள்ளன. கோவில் பணிகள் முடிந்த பிறகு, தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்படும். அஷ்ட பந்தன மருந்தை பீடத்தில் வைத்த பிறகு கடவுளின் சிலைகளை பீடத்தில் எழுந்தருளச்செய்வது காலங்காலமாக இருந்து வரும் நடைமுறையாகும்.

ashta-panthana-maha-kumbabishegam

இந்த அஷ்ட பந்தன கலவை எட்டு பொருட்களின் கலவையாகும். இந்த அஷ்ட பந்தன மருந்து தெய்வத்தை பீடத்துடன் வைத்திருக்கிறது. 12 வருடங்களுக்கு ஒரு முறை அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது நியதியாகும்.

ashta-panthana-maha-kumbabishegam

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நன்றாக இருக்க, மூல தெய்வம் அதன் பீடத்தில் அசையாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அது உலகத்துக்கும் உலகின் அனைத்து உயிர்களுக்கும் சிறப்பு. மூலவர் சிலை மட்டுமல்லாது கோவிலில் இருக்கும் அனைத்து சிலைகளுக்கும் இந்த அஷ்டபந்தன மருந்தை சாத்துவது அவசியமான ஒன்றாகும். கோவிலில் உள்ள ஒரு சிலை கூட விடுபடாமல் எல்லா சிலைகளின் அடியிலும் மருந்தை வைத்தால் தான் குடமுழுக்கு முழுமையடையும்.

ashta-panthana-maha-kumbabishegam

கொம்பரக்கில் தொடங்கி ஒவ்வொரு பொருளையும் உரலில் போட்டு இடிக்க வேண்டும். இந்த அஷ்டபந்தன மருந்தை தயார் செய்து எடுக்கும்போது திடமான கல் போல் இருக்கக்கூடாது. குலைந்தும் போய்விடக்கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதே சரியானதாகும்..

ashta-panthana-maha-kumbabishegam

அப்போது தான் இறைவனின் திருவருளை பீடத்தில் நிறுவுவது வசதியாக இருக்கும். இந்த மூலிகைகளை கலக்க பயன்படும் பாத்திரங்கள், உரம் மற்றும் உலக்கை போன்றவை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த பொருள் எவ்வளவு இடிக்கப்பட வேண்டும் என்பதற்கு அளவுகள் உள்ளன. அந்த அளவுகள் எதையும் மாற்றாமல் தயார் செய்ய வேண்டியது அவசியமாகும்.

ashta-panthana-maha-kumbabishegam

அஷ்டபந்தனம் தயாரிப்பாளர்களின் வாக்கு, மனம் மற்றும் செயல் அனைத்தும் தெய்வீக சிந்தனையில் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இந்த விசேஷமான மருந்து 100 ஆண்டுகள் வரை இருந்தாலும் எந்த பாதிப்பும் அடையாமல் இருக்குமாம். இருப்பினும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தெய்வங்களுக்கும் பீடத்திற்கும் இடையில் புதிதாக தயாரிக்கப்பட்ட அஷ்டபந்தன மருந்தை சாத்தி கும்பாபிஷேகம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

ashta-panthana-maha-kumbabishegam

இந்த மருந்து ஒவ்வொரு குடமுழுக்கு சமயத்திலும் மூலவரின் சிலைக்கு அடியில் வைக்கப்படுகிறது. மருந்தை வைத்த பிறகு சிறிது நேரம் எந்த பூஜைகளும் மூலவருக்கு செய்யப்படாது. சிறிது நேரம் கழித்து அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யும் போது, ​​மூலவர் சிலை அசையாமல் இருக்கும். இந்த காரணத்திற்காகத்தான் இந்த அஷ்ட பந்தன மருந்து சிலைகளுக்கு அடியில் வைக்கப்படுகிறது.