#LAMB: தமிழ்நாடு போக்குவரத்து ஆணைய APP!!! யாரையும் பேருந்தைப் பற்றிக் கேட்கத் தேவை இல்லை!!!
  • 17:35PM Oct 02,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:35PM Oct 02,2019 Chennai

பேருந்தில் பயணம் செய்பவர்களுக்குத்தான் தெரியும் உன்மையாக அது எத்தனை கஷ்டமான வேலை என்று. பேருந்து வருமா இல்லையா என்று மணிக்கணக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் கேட்கலாம் என்றாலும், அவர்களின் கதையும் இதேதான். காரணம், பேருந்துகளில் வழித்தடத்தில் ஏற்படும் மாறுதல்களை யாரால்தான் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க முடியும். ஒருவழியாக இந்தப் பிரச்சினை தற்போது முடிவுக்கு வரப் போகிறது. விஷயம் இல்லாமல் இல்லை. பிரச்சனையை தீர்க்க தமிழ்நாடு போக்குவரத்து ஆணையம் புதிய APP ஒன்றைத் தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட UBER, OLA APP-கள் போலவே இதுவும் செயல்படும் என்று சொல்லப்படுகிறது.

புரியவில்லையா??? சொல்கிறேன் கேளுங்கள். நம்முடைய பேருந்துகள் எங்கே இருக்கிறது என்பது முதற்கொண்டு, எத்தனை மணிக்கு நம்முடைய நிறுத்தத்திற்கு அது வரும், நமக்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் எது என அனைத்துத் தகவல்களையும் அளிக்கும் வகையில் APP இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மொத்தம் 21,800 பேருந்துகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படப் போவதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சென்னை மாநகரில் மட்டும் சுமார் 3,300 பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. CHALO INDIA என்ற APP DEVELOPER நிறுவனம் இந்த APP-ஐ உருவாக்கி வருகிறது. அனைத்துப் பேருந்துகளிலும் GPS பொருத்தப்படும். GEO-CODING-கிற்குத் தேவையான CODE-களைப் போக்குவரத்துத் துறைப் பணியாளர்கள் உருவாக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LOCATE AND ACCESS MY BUS - LAMB என்று பெயரிடப்பட்டுள்ள இந்த APP-ஐ உருவாக்க முதற்கட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது IOS மற்றும் ANDROID என இரண்டு PLATFORM-களிலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல். இதில் பேருந்தின் LIVE LOCATION, ESTIMATED TIME OF ARRIVAL ஆகியவற்றை அறிந்து கொள்ள இயலும். ACCURACY வெறும் 1 நிமிடம் வித்தியாசம்தானாம். பேருந்து கடக்க இருக்கும் அடுத்த 5 பேருந்து நிறுத்தங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ESTIMATED TIME, CALCULATE செய்யப்படுகிறது. கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. நடைமுறைக்கு என்று வருமோ???

NextGen Transport  |  First Female Bus Driver  |  Transport Scam  |  No Conductor Buses  |  Transport Strike  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top