கந்து வட்டி – சட்டம் என்ன சொல்லுது???
  • 13:16PM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:16PM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India

       சென்ற வாரம் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கந்து வட்டிக் கொடுமையால் தீக்குளித்து மாண்டனர்.  இணைய தளத்தில் வெளியான படங்களில் அனைவரின் மனதையும் கசக்கிப் பிழிந்தது 3 வயது பெண் தான் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட உணராமல், கையில் தின்பண்டத்தைப் பிடித்தபடி எரிந்தவாறு ஓடிக் கொண்டிருந்த தன் தாயைப் பார்த்தபடி நின்றிருந்ததே… அந்தக் காட்சியின் கோரம் இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்க, இன்று ஊடகங்கள் கந்து வட்டிக் கும்பல் அவர்களிடம் பேசிய தொலைபேசி உரையாடலை வெளியிட்டது இன்னும் கொடூரமாகத் தோன்றியது.  அதைப் பற்றியும் பணம் கொடுக்கல் வாங்கல் பற்றிய சட்ட அறிவு இருக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் இது போன்ற உயிரிழப்புகள் நேராது என்ற நம்பிக்கையிலேயே இந்தப் பதிவு. 

       சரி, முதலில் கந்து வட்டி வாங்கும் நிலைக்கு ஏன் தள்ளப்படுகிறார்கள்? அடிப்படையில் நமது வங்கித் துறையும் கூட ஒரு காரணம் என்று கூறலாம்.  எப்படி என்றால் CIBIL எனப்படும் கிரெடிட் ரேட்டிங்கை வைத்து வங்கியில் கடன் வாங்கும் தகுதியை நிர்ணயிப்பது.  எனக்குத் தெரிந்து உங்கள் வங்கிக் கணக்கில் நீங்கள் செலுத்திய வேறொருவருடைய செக் பவுன்ஸ் ஆனாலும் கூட அது உங்கள் ஸ்டேட்மெண்ட்டை பாதிக்கும்.  இது மட்டுமல்லாது, கடன் வாங்குவதற்கான நடைமுறைகள், ஒரு தவணை தவறியது முதற்கொண்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.  3 ம் தேதி சம்பளம் போடுவது தவறி 5ம் தேதி சம்பளம் போட்டால், 4ம் தேதி தவணை வந்தால் அது கூட உங்கள் CIBIL Score ஐ பாதிக்கும்.  முறைசாரா தொழில்கள், நாள் சம்பளம், கூலி வேலை செய்பவர்களுக்கெல்லாம் வங்கிக் கடன் வாய்ப்பே இல்லை.  இப்படி மிக நெருக்கமான சட்ட வரையறைகளால் வங்கிக் கடன் என்பது இன்று இந்தியாவில் கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு மேல் வாய்ப்பில்லாமலே போய்விடுகிறது. இதை மாற்றாத வரையில், வங்கிகள் எத்தனை பணம் வைத்திருந்தாலும், எந்தப் பயனும் இல்லாமல் ஏற்கெனவே கடன் வாங்கத் தகுதியுள்ளவர்களாக இருக்கும் நபர்களுக்கு அதிகத் தொகையாக மாறி அவர்களையும் தவணை தவறியவர்களாக மாற்றுவதைத் தவிர பெரிதாக எந்தப் பிரயோஜனமும் ஏற்படப் போவது இல்லை.

       இன்றைய தேதியில் கடன் என்பது ஒரு தேவையாகவே மாறிப் போய்விட்டது. விலைவாசி ஏறும் அளவு வேகத்தில் சம்பளம் ஏறுவது இல்லை.  மாதத்தின் கடைசிப் பகுதியை ஓட்டவே கடன் வாங்கியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  முதலில் கந்து வட்டிச் சட்டத்தைப் பற்றிய முழுமையான அறிவு அனைவருக்கும் தெரிய வேண்டியது மிகவும் அவசியம்.  தமிழ்நாடு பணம் கொடுப்பவர்கள் சட்டம் 1957 (Tamilnadu Money Lenders Act, Act 26 of 1957) தான் தமிழகத்தில் இதற்கான முதல் சட்டம், இது வங்கி முதற்கொண்டு அனைத்து விதமான நிதி வழங்கும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும்.  இந்தச் சட்டத்தின் முக்கிய விதிகளைப் பார்ப்போம்.

  1. கண்டிப்பாக License வாங்கியிருக்க வேண்டும்.  இதற்கு கம்பெனி சட்டங்களின்படி கம்பெனியாக பதிய வேண்டிய அவசியமில்லாவிட்டாலும், தனி நபராக இருப்பினும் அவர் பெயரிலோ, குடும்பமாக இருப்பின் குடும்பத் தலைவர் பெயரிலோ License வாங்கியே ஆக வேண்டும். License இல்லாத யாரும், பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட முடியாது.
  2. நிறுவனத்திற்கு அலுவலகம் என்று ஒன்று இருந்தாக வேண்டும்.  எத்தனை ஊர்களில் இவர்களுக்குக் கிளைகள் அல்லது வரவு செலவு இருந்தாலும், அனைத்து ஊர்களிலும் அலுவலகம் இருப்பது அவசியம். 
  3. கண்டிப்பாக தங்கள் தொழிலை அறிவுறுத்தும் விதமாகப் பெயர் பலகை வைத்திருப்பது அவசியம். 
  4. அரசு நிர்ணயிக்கும் தொகைக்கு மேலாக வட்டி வ௲லிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் License பறிமுதல் செய்யப்படும். அதற்கு மேல் அவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலைத் தொழில்முறையாகச் செய்யக் கூடாது.
  5. பணம் கட்டியதற்கு முறையான இரசீது வழங்கப்பட வேண்டும்.  அதற்கான ஆவணங்களையும் முறையாகப் பராமரித்திருப்பது அவசியம். 
  6. தொழில்முறையாக வட்டிக்கு பணம் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
  7. பணம் வ௲லிக்க வார்த்தைகளாலோ, பலத்தாலோ பணம் வாங்கியவரைத் துன்புறுத்தினால் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும்.  குறைந்தபட்சம் மூன்று மாதங்கள், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனை அளிக்கலாம்.

மேலே குறிப்பிட்ட அனைத்துச் சட்ட விதிகளையும் உங்களுக்குப் பணம் அளித்தவருடன் பொருத்திப் பாருங்கள்.  உண்மையில், அவர்களுக்கு License இல்லையென்றால் உங்கள் மீது காவல்துறை வழக்கு கூடப் போட முடியாது. அது மட்டுமல்லாமல், மீறப்பட்ட ஒவ்வொரு சட்ட விதிக்கும் நீங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடியும். இந்தச் சட்டம் ஒரு முறை மீண்டும் 1979 ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.  (Tamilnadu Act XLI of 1979) அரசு இந்த வட்டி விவகாரத்தில் பரிந்துரை செய்வதை ரிசர்வ் வங்கிக்கு மாற்றியமைத்தது.  இருப்பினும் மிக முக்கியமான ஒரு சட்ட விதி இதிலும் இருக்கிறது.  மேலே சொன்ன அத்தனை விதிகளுடன் கூடவே,

  1. ரிசர்வ் வங்கி வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நேரடியாக வட்டி நிர்ணயம் செய்யும்.  இருப்பினும், தனி நபர் கடன்கள் அந்த வட்டி விகிதங்களுக்கு 2 – 3% சதவீதம் அளவுக்கு மட்டும் வட்டி வ௲லிக்க வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டது.

அதாவது, வங்கியில் வழங்கப்படும் வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக அவர்களால் 3 சதவீதம் மட்டுமே அதிகமாக வ௲லிக்க முடியும்.  நீங்கள் தற்போது கட்டிக் கொண்டிருப்பது எத்தனை சதவீதம் என்பதை எண்ணிப் பாருங்கள்.  இறுதியாக, 2003ல் ஒரு புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. (Tamilnadu Prohibation of Charging Exhorbitant Interest Act – Tamil Nadu Act 38/2003)  இந்தச் சட்டத்தில் கூடுதல் சிறப்பு விதிகள் சேர்க்கப்பட்டது. அதன் படி,

  1. 24% வட்டி வ௲ல் என்பது சட்டப்படி தவறு என்பதும், நீதிமன்றங்கள் கூட அதனைக் கொடுக்குமாறு பரிந்துரை செய்யக்கூடாது.
  2. வார்த்தையினாலோ அல்லது உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு 6 மாதங்களில் இருந்து 3 வருடங்களாக தண்டனையை உயர்த்தியது.
  3. ஒருவேளை சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் அதனைத் திரும்ப கோர்ட் மூலம் பெற முடியும்.

மேலே சொன்ன அனைத்து சட்டங்களும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் யாராலும் உங்களை மிரட்டவோ, அச்சுறுத்தவோ முடியாது.  காவல்துறை FIR போட்டதற்காக உங்களிடம் வன்மமாக நடந்து கொள்ள முடியாது.  தைரியமாக நில்லுங்கள்.  யார் உயிராக இருந்தாலும், அது நம்முடையதோ, நம் பிள்ளைகளுடையதோ மிகவும் மதிப்பு வாய்ந்தது.  இனிமேலும், பிரச்சினைகளைக் கண்டு சாகத் துணியாமல் கேள்வி கேட்டுப் பழகுங்கள்.  சட்டம் உங்கள் துணை நிற்கும்.  எல்லாவற்றுக்கும் மேலாக, கந்து வட்டிக்கு பணம் வாங்குவதைத் தவிருங்கள்… இந்தத் தகவல் யாருக்காவது பயன்படும்… உங்களால் முடிந்த அளவு ஷேர் செய்யுங்கள்…

 நன்றி!!! 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top