Misc

தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க காரணம் என்ன? எல்லா தப்பையும் நம்ம மேல வச்சுக்கிட்டு குத்துது கொடையுதுன்னா என்ன பண்றது!

Sep 11 2021 11:52:00 AM

ஊருல பாதி பேர் வேலை இல்லாம தான் சுத்திக்கிட்டு இருக்காங்க. இதுக்கு காரணம் ஆண்ட்ராய்டு மொபைல் போனும், இன்டர்நெட் வசதியும் தான் என்று சொன்னால் நம்புவீர்களா. உண்மையாவே இதுதான் காரணம். கிடைக்கும் நேரத்தில் வேலை தேடுவதை விட்டுவிட்டு எல்லாரும் மொபைல் போனை நோண்டிக்கிட்டு இருந்தா வேலை எப்படி கிடைக்கும்.

north india people tamilnadu job entry

இப்ப கொங்கு மண்டலத்தில் இருக்கும் ஆடை தொழிற்சாலைகளிலும், வீடுகட்டும் வேலை செய்யும் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் பாதி பேர் ஹிந்திகாரங்க தான். அவங்க படிக்காம காசுன்னு ஏதாச்சும் குடுத்தா போதும் என்று வேலைக்கு செல்கிறார்கள். நம்ம தான் படிச்ச வேலைக்கு போகணும், நமக்கு புடிச்ச வேலைக்கு போகணும் என்று சொல்லிக்கொண்டு வீட்டிலேயே ஒக்காந்து இருக்கோம்.

north india people tamilnadu job entry

படிச்ச வேலைக்கு தான் போகணும்னா நாட்டுலமுக்கால் வாசி பேர் வேலைக்கே போக முடியாது. எல்லாரும் தங்கள் சூழ்நிலையை நினைத்து ஏதோ ஒரு வேலைக்கு போய்க்கிட்டு இருக்காங்க. அதிலும் சிலர் நான் கவர்மெண்ட் வேலைக்கு தான் போவேன் என்று எந்த வேலையும் பார்க்காமல் வீட்டிலேயே ஒக்காந்து படிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு 8000 ரூபாய்க்கு எதோ ஒரு வேலைக்கு போய்க்கிட்டு படிச்சால் அவங்க குடும்ப சுமையும் கொஞ்சம் குறையும். இப்படியே நம்ம ஆளுங்க சொல்லிக்கிட்டு ஒக்காந்துக்கிட்டு இருந்தா நாளைக்கு எல்லா கம்பெனியிலயும் ஹிந்திகாரன் தான் வேளையில் இருப்பாங்க என்பதை மறக்காமல் இருப்பது ரொம்ப நல்லது.

north india people tamilnadu job entry