TWITTER TRENDS: தமிழிசை கூறிய செயற்கை மழைக்கு என்ன அர்த்தம் தெரியுமா???
  • 18:46PM Dec 05,2018 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:46PM Dec 05,2018 Chennai

கடந்த இரண்டு நாட்களாக திமுகவும் பாஜகவும் CHALLENGE MODE-க்குப் போய்விட்டார்கள் போல. தமிழிசை அவர்கள் முதலில் “செயற்கை மழை பெய்ய வைத்தாவது, தமிழகத்தில் தாமரையை மலர வைப்போம்” என்று சவால் விட, திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று காட்டமாக, “தாமரை அல்ல புல் கூட மலராது” என்று காட்டமாக பதிலளித்திருக்கிறார். இது TWITTER-ல் நேற்று பரபரப்பாகப் பேசப்பட்டது. சரி, “எப்பாடு பட்டாலும்” என்று சொல்லாமல், “செயற்கை மழை” என்று தமிழிசை ஏன் சொல்ல வேண்டும்??? அப்படியென்றால் OPERATION TAMILNADU திட்டம் ஏற்கெனவே செயலில் உள்ளதா போன்ற பல்வேறு கேள்விகள் எந்த ஒரு சராசரி அரசியல் பார்வையாளருக்கும் நிச்சயம் ஏற்படும். அவர் “செயற்கை மழை” என்று எதைக் குறிப்பிட்டார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மழை என்பது வாக்காளர்கள் என்று கருதினால், சொல்லப்பட்ட அர்த்தம் அப்படியே வேறு மாதிரி மாறிவிடும்.

ஆனால், பாஜகவுக்கு வெற்றி பெறும் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் ஓட்டு விழுந்தது என்று சொன்னால் தமிழகத்தில் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படியென்றால் அவர்களின் OPERATION TAMILNADU STRATEGY என்னவாக இருக்கக் கூடும். அதற்கு முன்பாக நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. இரட்டை இலைக்காக தினகரன் அணி, பன்னீர்செல்வம் அணி என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து போராடிக் கொண்டிருக்கும் போது, அதற்காக டில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இன்றுதான் நீதிமன்றம் வழக்கையே எடுத்திருக்கிறது. ஆனால், அம்மா இறந்து 2 வருடங்களாகி விட்ட நிலையில், இன்றுவரை லஞ்சம் பெற முயன்ற தேர்தல் அதிகாரி யார் என்பதை மத்திய அரசோ, தேர்தல் ஆணையமோ அல்லது சம்பந்தப்பட்ட வேறு எந்த அரசு இயந்திரமும் வெளிப்படுத்தவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, EVM TAMPERING எனப்படும் வாக்குப்பதிவு இயந்திர ஊழல் புகார். கடந்த வாரத்தில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக CCTV-க்கள் வேலை செய்யவில்லை, ஹோட்டல் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் சிக்கிய தேர்தல் அதிகாரிகள், கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது ஒரு தொகுதியில் வாக்காளர்களை விட அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவானது என்று அனைத்தும் சந்தேகத்திற்கிடமான வகையில் நடக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து மாநில எதிர்க்கட்சிகளுமே வாக்குச்சீட்டு முறை வேண்டுமென கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம். மேலே கூறப்பட்ட EVM TAMPERING தேர்தல் ஆணையத்தின் ஆசியோடு நடைபெறுவது உன்மையாக இருக்கும் பட்சத்தில், பாஜகவுக்குத் தேவை, பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறக் கூடும் என்று மக்கள் நம்பும் வகையிலான ரஜினி கமல் போன்ற செல்வாக்கு மிக்க ஒரு ஆள்தான்.

திராவிடக் கட்சிகளை எதிர்த்துப் பேசிவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி சேருமா என்ற கேள்வி பலமாகவே எழுகிறது. அப்படியே இருந்தாலும், அதிமுக நேரடிக் கூட்டணியில் ஒன்றாகத்தான் இருக்கும். தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு என்ன என்பதை அக்கட்சியினரே நன்கு அறிவார்கள். அதனால், மூன்றாவது பெரிய அணியாக அந்த செல்வாக்கு மிக்க ஆள் களம் இறக்கப்படுவார். அவர்களுக்கு வாக்குகளைப் பெற்றுத் தருவதை பாஜக பார்த்துக் கொள்ளும். வெற்றி பெற்ற பின்பு, பாஜகவை இந்த செல்வாக்கு மிக்க ஆள் ஆட்சியில் அமர்த்துவார். இதுதான் நடக்க வாய்ப்பிருக்கிறது. கர்நாடகாவில் எந்த காரணத்திற்காக ஆட்சியில் அமர முடியாமல் போனதோ, அதை வைத்து இங்கு ஆட்சியைப் பிடிக்கத் திட்டங்கள் நடக்கும். OPERATION TAMILNADU துவங்கி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிறது. யாருக்குப் பால் ஊற்றுகிறோம் என்று தெரியாமல் அதிமுகவும் வழக்குகளுக்குப் பயந்து பாலூற்றிக் கொண்டிருக்கிறது. இது தெரிந்த காரணத்தால்தான் பாஜகவினர் அத்தனை உறுதியாக “செயற்கை மழை”-யைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் உஷாராகுமா???    

 

Top