#TamilisaiSoundararajan விமான நிலையத்தில் "பா.ஜ.க ஜெயிக்கவே ஜெயிக்காது" என்று கோசம் எழுப்பிய தமிழிசை மகன்! தாய் மகனுக்கு இடையே கருத்து வேறுபாடா?
  • 13:49PM Jun 10,2019 Chennai Domestic Airport
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 13:49PM Jun 10,2019 Chennai Domestic Airport

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுக்க வெற்றிபெற பாஜகவால் தமிழகத்தில் ஒரு தொகுதியை கூடப் பிடிக்க முடியவில்லை. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பேசிவந்த தமிழகப் பாஜக தலைவர் தமிழிசையும், அவர் போட்டியிட்ட தூத்துக்குடி தொகுதியிலும் தோல்வியைக் கண்டார். தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு ஏகப்பட்ட காரணங்களைக் கூறி வந்தார் தமிழிசை. இவரது தலைமை சரியில்லாத காரணத்தால் தான் பாஜக தோல்வி அடைந்துள்ளது என்றும், தமிழகப் பாஜக தலைவர் பதவி மாற்றப்படலாம் என்றும் பலர் பேசி வந்தனர்.

இந்நிலையில் இவரது குடும்பத்திலேயே எதிர்ப்பு அதிகமாகி இருப்பதாகச் செய்திகள் பரவியது. இவரது தந்தை காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது. இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த பாஜக, தேர்தலில் போட்டியிடாத நிர்மலா சீதாராமன், ஜெய் ஷங்கர் போன்றோருக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அடையாளம் தெரியாத கட்சியாக இருந்த பாஜகவை ஊர் அறியும்படி செய்தவர் தமிழிசை. அவருக்கு எந்தப் பதவியும் வழங்காமல், இருக்கும் பதவியையும் திருப்பிப் பெறுவது பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த கொண்டிருக்கும் போது அவரது மகன் சுகநாதன், "தமிழகத்தில் பா.ஜ.க ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காது" என்று கோஷம் எழுப்பியுள்ளார்.

இது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தொண்டர்கள் சுகநாதனை அந்த இடத்தில் இருந்து அழைத்துச் சென்றனர். தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகச் சுகநாதன் இப்படிக் கோஷம் எழுப்பினர் என்று கூறி தமிழிசை சமாளித்துவிட்டார். சுகநாதன் செய்தியாளர்கள் முன்னிலையில் இப்படிக் கூறியது அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் தூத்துக்குடி நிலையத்தில் "பாசிச பாரதிய ஜனதா ஒழிக" என்று கோஷம் எழுப்பிய சோபியா மனைவியைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று தமிழிசை போராடினர், ஆனால் தற்போது அவர் மகனே இப்படிக் கோஷம் எழுப்பி இருப்பதற்கு என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top