Misc

#TV: டீவி சீரியல் பார்த்தால் உண்மையாலுமே 5 இலட்சம் கிடைக்குமா? பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தும் வசூல்வேட்டை!

Aug 10 2020 07:07:00 PM

இவங்களுக்கு மக்கள் எக்கேடோ கெட்டுப்போனால் என்ன, நமக்கு வியாபாரம் ஆக வேண்டும் என்பது மட்டுமே குறியாக இருக்கும் போல. இதுவரை கொரோனாவிற்கு தொலைக்காட்சிகள் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டதாக கேள்விப்படவே இல்லை. சீரியல்களை நம்பி பிழைப்பு நடத்தும் சில தொலைக்காட்சிகளுக்கு, கொரோனா சூழல் கொஞ்சம் கலக்கத்தை கொடுக்கவே, விட்ட காசை மீண்டும் சுருட்ட, அடுத்த சதுரங்க வேட்டையை ஆரம்பித்துவிட்டனர்.

tv-serial prize tamil-tv

குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி இரண்டு மணி நேரம் சீரியல் பார்த்தால், ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு என்கிறது. ஆனால் அந்த இரண்டு மணி நேரத்தில் அவர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு, 21 நிமிடங்கள் விளம்பரம் வரும். இரண்டு மணி நேரத்திற்கு 42 நிமிடங்கள் விளம்பரம் மட்டுமே ஓடும். பத்து வினாடி விளம்பரத்துக்கு 55 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றால், 42 நிமிடங்களுக்கு கணக்கு போட்டால், கோடிகளை தாண்டும்.

tv-serial prize tamil-tv

அதில் உங்களுக்கு பரிசாக செலவிடப்படும் தொகை, ஐந்து இலட்சம் எந்த மூலைக்கு போகும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். அதுவுமே 5 லட்சம் ரூபாய் 500 பேருக்கு சமமாக பிரித்து கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை அந்த விளம்பரத்தின் வலது பகுதியில் போட்டு இருப்பார்கள். உற்று கவனித்தால் தான் தெரியும். நிறைய மக்கள் 5லட்சம் 500 பேருக்கும் கொடுப்பார்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். பகிர்ந்தளிக்கப்படும் என்பதை, கூறாமல் இருப்பதும் ஒரு விளம்பர தந்திரமே.

tv-serial prize tamil-tv

இதனால் அவர்களுக்கு என்ன இலாபம் என்று யோசிக்கிறீர்களா? கொரோனா சூழலில் குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வந்தவர்கள், பரிசுக்காக மீண்டும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். பின்னர் அதுவே பழக்கமாகும். சீரியல் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமானால், டி.ஆர்.பி அதிகரித்து, இன்னும் விளம்பர கட்டணம் அதிகமாகும். வருமானம் கூடுதலாக கிடைக்கும். ஆசையை தூண்டி விட்டு ஆதாயம் தேடுவது, இந்த மாதிரி தான். இந்த சூட்சமம் அறியா மக்கள், விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளாய், ஒளியைத்தேடி ஓடுகின்றனரே.