#TamilNadu : தமிழ் நாட்டில் இனி 24*7 அனைத்து பொருள்களும் வாங்கலாம் !!!
  • 05:07AM Jun 07,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 05:07AM Jun 07,2019 Tamil Nadu

வணிகர் சங்கங்கள் தமிழ் நாட்டில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தன,அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ரீதியான வளர்ச்சியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் கூறப்பட்டுள்ளது.

24.jpg

இந்த அரசனையின்படி வழக்கமாக தமிழகத்தில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை அனைத்து கடைகளும், அலுவலகங்களும், சினிமா தியேட்டர்களும் உணவகங்களும்  திறந்து இருக்கும். இனிமேல் இவை அனைத்தும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது

24 1.jpg

ஆனால் ஒருவர் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனவும், பெண்கள் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை அவர்கள் அனுமதி பெற்று வேலை வைத்துக்கொள்ளலாம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.

24 3.jpg

இனிமேல்  24 மணி நேரமும்  அனைத்து கடைகளும் திறந்திருக்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வேண்டிய பொருட்களை வாங்கி கொள்ளலாம், ஹோட்டல்களில் சாப்பிடலாம், சினிமா தியேட்டர்களில் படம் பாக்கலாம்,

Share This Story

துரை முருகன்

Top