Misc

கேரளத்து பெண்கள் தமிழ் பசங்களை விரும்பி, திருமணம் செய்ய காரணம் என்ன? கேரளத்து ஆண்களிடம் இல்லாத என்ன நம்ம பசங்களிடம் உள்ளது?

Jun 08 2021 11:05:00 AM

மாமா பையனுக்கு வயது 34 பிறந்துவிட்டது. ஆனாலும் பாருங்க, தமிழ்நாட்டில் பெண் கிடைக்கவே இல்லை. உள்ளூர்குள்ள தான் கிடைக்கவில்லை. பக்கத்து மாநிலத்துலயாவது போய் பார்க்கலாம் என கேரளாவை நோக்கி ப டையெடுக்க ஆரம்பித்துவிட்டனர் இந்த பெண் தேடி அலையும் கூட்டம். 'நீயா நானா' ஷோவின் ஒரு எபிசோடில் பெண்கள் தங்களது கணவர்மார்களை கனவு பற்றி சொன்னார்களே பார்த்தீர்களா? அதில் உள்ளவாறே, நம்ம பெண்கள் முன்வைக்கும் கண்டிஷன்கள் ஏராளம். 

tamil-wedding kerala-girl

27 வயதில் மாப்பிளைக்கு சொந்த வீடு இருக்க வேண்டும், ஆனால் அதற்கு EMI இருக்ககூடாது. அப்படி இருந்தாலும் கல்யாணத்திற்கு பிறகு கணவர் தான் கட்டவேண்டும். தான் வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தாலும் கூட, கணவரின் EMI கட்டமாட்டோம். US மாப்பிள்ளை வேண்டும். அவருக்கு இந்தியாவில் காடு, தோட்டம் இருக்க வேண்டும். அப்பப்பா? எத்தனை கண்டிஷன்? இப்படியெல்லாம் அடுக்கிகொண்டே போனால், மிடில் கிளாஸ் பசங்களுக்கு பெண்ணே கிடைக்காதே? அவர்களும் பெண் தேடி கொண்டே இருப்பார்கள். வயது அதிகமாக அதிகமாக இங்கு பெண் கிடைக்காது என பக்கத்து மாநிலமான கேரளா சென்று பெண் கட்டி வருகிறார்கள்.

tamil-wedding kerala-girl

ப்ரோக்கர்களுக்கு கேரளாவிலும் நல்ல குடும்பங்களில் தொடர்பு இருப்பதால் இங்குள்ள ஆண்களுக்கு அங்கு எளிதில் பெண் கிடைத்து விடுகிறது. இதெல்லாம் ஆண்கள் வர்க்கத்திற்கு தேவை தான். ஒரு காலத்தில் எத்தனை எகத்தாளம் செய்து கொண்டு திரிந்தார்கள் இந்த மாப்பிள்ளை வீட்டார்? முகூர்த்தத்திற்கு முன்னரே 100 சவரன் நகையை வைத்துவிட வேண்டும். மாப்பிள்ளை ஆபிஸ் சென்றுவர ஸ்கூட்டர் வேணும். பொங்கல் சீராக மாப்பிள்ளைக்கு ஐந்துசவரன் போட வேண்டும். வைர மோதிரம் வேண்டும் என எத்தனை சீர் வரிசை? சீதனம் கேட்பதாலே பல பெண்களுக்கு திருமணமே ஆகாமல் இ றந்தவர்களும் உண்டு. அவர்கள் விட்ட சா பம் தான் ஆண் வர்க்கத்தை போட்டு வ தைக்கிறது. 

tamil-wedding kerala-girl

ஆணை பெற்றுவிட்டாலே ஏதோ கொ ம்பு முளைத்துவிடுகிறது இந்த பெண்களுக்கு. வளர்ந்த அந்த கொ ம்புகளை உடைக்க தான், கடவுள் இப்படி செய்கிறாரோ? ஒரு காலத்தில் ஆணை பெற்ற பெண் என்றால் அந்த தெருவே மரியாதை கொடுக்கும். சாதுவாக இருக்கும் பெண் கூட ஆண் குழந்தை பெற்றுவிட்டால் மெல்ல மெல்ல ச ர்வாதிகாரியாக மாறுவார். இதெல்லாம் இறுதியாக பெண்ணை பெற்றவளை அந்த குழந்தையை வெ றுக்கும் அளவிற்கு கொண்டு வந்துவிடுகிறது. இதனாலே சி சு கொ லைகளும் சாதாரணமாக நடந்தது. 

tamil-wedding kerala-girl

இப்போதுகூட பையனை பெற்றவர்கள் பெண் கிடைக்கும் வரை தான் அடக்கி வாசிக்கிறார்கள். பிறகு மீண்டும் எங்கேயோ இருந்து, பையனை பெற்றவர்கள் என்ற வீம்பு வந்து தலையில் ஏறிக்கொள்கிறது. ஆனாலும் முன்னர் மருமகளது முடியை பிடித்து அ டிக்கும் அளவிற்கு அதிகாரத்தை கைமீறி வைத்திருந்த கொ டுமையான மாமியார்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டு. கணவர் வாயை திறக்ககூட மாட்டாராம். ஆனால் இப்போது அப்படி நடந்துவிடுமா? பெண்களுக்காக எத்தனை அமைப்புகள், அரசின் சட்டங்கள்? இதற்கெல்லாம் சேர்த்துதான் பெண்கள் வர்க்கம், தற்போது மாப்பிள்ளை வீட்டாரை வச்சு செய்கிறார்களோ?