#directors : புகழ் பெற்ற இயக்குனர்களின் அறிமுக படங்கள்
  • 13:12PM Jun 17,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 13:12PM Jun 17,2019 Tamil Nadu

சினிமாவை பொறுத்தவரை இயக்குனர்களுக்கு முதல் படம் என்பது அவர்களின் திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாகும் அதனை சரியான முறையில் உபயோகித்து இன்று தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் உள்ள  இயக்குனர்களின் முதல் படங்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்

SAC.jpeg

இன்றைய தலைமுறைக்கு இயக்குனர் எஸ் ஏ சந்திர சேகரை நடிகர் இயக்குனரின் தந்தையாக மட்டுமே தெரியும் ஆனால் சந்திரசேகர் ஒரு காலத்தில் பல நட்சத்திர நடிகர்களை உருவாக்கிய இயக்குனர்,இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான முதல்  திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. இப்படம் ஒரு நல்ல வெற்றியை பெற்றது. இப்படம் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.

hari.jpg

சிங்கம் பட புகழ் இயக்குனர் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தமிழ். இப்படத்தில் நாசர், சிம்ரன் மற்றும் வடிவேலு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது.இந்த படம் முலமாக தான் மதுரையை கதைக்களமாக தேர்வு செய்யும் ட்ரெண்ட் உருவானது அது இன்றும் தொடர்கிறது ,அந்த வகையில் இந்த படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் ஆகும்

vikraman.jpg

இயக்குனர் விக்ரமன் முதல்  இயக்கத்தில் முரளி நடிப்பில் வெளியான திரைப்படம் புது வசந்தம். இப்படத்தில் ராஜா, சித்தாரா, ஆனந்த்பாபு மற்றும் சார்லி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எஸ் ஏ ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று  மாபெரும் வெற்றியடைந்தது .

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top