Lushgreen

இந்த பிரபலமான இயக்குனரா இப்படி குப்பைக்கதைகளை எடுத்தார்? நம்பவே முடியாத மாபெரும் இயக்குனர்களின் மொக்கை படங்கள்!

Jun 11 2021 12:05:00 PM

யானைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி. அதுபோல சில முன்னணி இயக்குனர்களும் தங்கள் வாழ்க்கையில் சில மொக்கைப்படங்களை எடுத்துள்ளனர். நடிகர் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற மொக்கை படத்தை எடுத்தார். இந்த படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையில் முருகதாஸ் கோட்டைவிட்டிருப்பார்.

tamil cinema industry director

விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் முன்னணி நடிகர்களாக மாற இயக்குனர் பாலா தான் காரணம். தன்னுடைய மகன் நடிக்கும் படத்தை தன் ஆஸ்தான டைரக்டர் பாலா தான் இயக்கவேண்டும் என்று விக்ரம் அடம்பிடித்து வர்மா படத்தை எடுத்தனர். ஆனால் படம் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் வேறொரு இயக்குனரை வைத்து விக்ரம் வர்மா படத்தை எடுத்துவிட்டார். ஆக மொத்தம் ரெண்டு படமுமே தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை ஈடுசெய்ய முடியவில்லை.

tamil cinema industry director

தனுஷ் ஆரம்ப காலத்தில் சினிமாவில் முன்னேற முக்கிய காரணம் செல்வராகவன். இப்படியும் படம் டுக்க முடியுமா என்னும் அளவுக்கு செல்வராகவனின் படைப்புகள் இருக்கும். ஆனால் அதே செல்வராகவன் தான் NGK, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை என்ற குப்பைப்படங்களையும் எடுத்தார்.

tamil cinema industry director

மிஸ்கின் எடுக்கும் படங்கள் எப்போதும் வித்யாசமாக இருக்கும். அவருடைய படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவரும் கமர்சியல் படம் எடுக்கிறேன் என்று முகமூடி படத்தை எடுத்து மொக்கை வாங்கினார்.

tamil cinema industry director

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல படங்களை எடுத்த லிங்குசாமி தான் ராஜபாட்டை என்ற மாபெரும் மொக்கை படத்தையும் எடுத்தார். இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே நிலவிய போதும் படம் படுதோ ல்வி அடைந்தது.

tamil cinema industry director