#talcumpowder: குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் முன் டால்கம் பவுடர் போடுவதால் ஏற்படும் விபரீதம்! ஆராய்ச்சியின் முடிவில் வெளியான ரிசல்ட்!
  • 09:34AM Sep 23,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 09:34AM Sep 23,2019 Chennai

டால்கம் பவுடர்  பயன்படுத்துபவரா நீங்க?? அப்போது உங்களுக்கு தான் இந்த பதிவு. முகம் மட்டுமின்றி உடலுக்கு இந்தப் பவுடரை உபயோகப்படுத்துவோரும் உண்டு. சருமத்தில் ஏற்படும் அரிப்புகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது டால்கம். மக்னீசியம், சிலிகான் மற்றும் ஆக்சிஜன்  சேர்ந்த கலவையால்  தான் இந்த பவுடர் தயாரிக்கப்படுகிறது.

இயற்கையான இதன்  வடிவில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) எனும் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. டால்கம் பவுடரில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ்ஸை நாம்  சுவாசிக்கும்போது  நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆயினும்  கடைகளில் விற்கப்படும் பவுடர்களில் டால்க் எனும் கனிமம் இல்லையென்று கூறப்பட்டாலும் அது ஆஸ்பெஸ்டாஸ் அற்ற டால்க் தானா எஎன்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். ஆனால் அப்படி உறுதி செய்து கொள்வதும் சுலபமான வேலை அல்ல.

இந்த பவுடரை பெண்கள் பிறப்புறுப்புப் பகுதியிலோ, சானிட்டரி நாப்கினிலோ வைத்துப் பயன்படுத்தினால் அது சினைப்பை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துமா? என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்  டால்கம் பவுடர் பயன்படுத்திய பெண்களுக்கு சினைப்பைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பிரபல நிறுவனம் ஒன்று இந்தியாவில் விற்பனை செய்யும்  உரிமை இழந்தது நினைவிருக்கலாம். அதன்படி மேற்கொண்ட ஆய்வில்,  அந்த நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடர்களைப் பரிசோதித்ததில், அதில் செறிவுபடுத்தபட்ட  எத்திலீன் ஆக்சைடு எனும் வேதிப்பொருள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எத்திலீன் ஆக்சைடு புற்றுநோயை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட காரணியாகும்.  international agency for research on cancer ஆஸ்பெஸ்டாஸ் உள்ள டால்க்கம் பவுடர் மனிதர்களுக்குப் கேன்சரை ஏற்படுத்த காரணமாக இருப்பதாக கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.American Academy of pediatrics குழந்தைகளுக்கான பவுடர் பயன்படுத்துவது நல்லதல்ல என  கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனை பயன்படுத்தும் போது சுவாசப் பாதை வழியில்  அந்த பவுடர் துகள்கள் செல்வதை தடுக்க முடியாது. குழந்தைகளுக்கு இவை  நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தையின் உடலில் நேரடியாக பவுடரைக் போடாமல் பெற்றோர் தங்கள் கைகளில் தேய்த்து பூசிவிடலாம். குழந்தைக்கு ஒவ்வொருமுறையும் டயாப்பர்  போடும் போது,  ஏற்கெனவே பூசியிருக்கும் பவுடரை துடைத்து விட்டு மாற்றவும்.  பெண் குழந்தைகளுக்குப் பிறப்புறுப்பில் பவுடர் செல்லாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியமான ஒன்று. 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top