#TabraizShamsi நம்ம கண்ணை நம்மளாலேயே நம்பமுடியலயே...மைதானத்தில் மேஜிசியனாக மாறிய கிரிக்கெட் வீரர்!
  • 17:55PM Jun 01,2020 South Africa
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:55PM Jun 01,2020 South Africa

ரசிகர்கள் கூடியிருக்கும் மைதானத்தில் சில அசத்தலான சாதனைகள் படைக்கும் கிரிக்கெட் வீரர்களை நாம் பார்த்திருப்போம், ஆனால் கிரிக்கெட் மைதானத்தை மேஜிக் ஷோவாக மாற்றிய முதல் கிரிக்கெட் வீரர் இவராகத்தான் இருக்கமுடியும். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடந்த கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவானை அவுட் ஆக்கி அவரைக் கலாய்த்து வெளியில் அனுப்பிய வேகப்பந்து வீச்சாளர் Tabraiz Shamsi-ஐ நம்மால் மறக்கமுடியாது. தற்போது ஐபிஎல் போலத் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உள்நாட்டு போட்டியான Mzansi Super League-ல் Paarl Rocks என்ற அணிக்காக Tabraiz Shamsi விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த லீக் போட்டியில் Paarl Rocks மற்றும் Durban Heat அணிகள் மோதின, விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் Durban Heat சார்பாக விளையாடிய David Miller விக்கெட்டை Tabraiz Shamsi.

#Ponniyin Selvan : பொன்னியின் செல்வன் படத்தின் பதிய அப்டேட் !!!

SA Cricketer Tabraiz Shamsi Pulls Off A Magic Trick After Taking A Wicket

David Miller விக்ஸ்ட் விழுந்த சந்தோஷத்தில் அனைவரும் கொண்டாடிய போது, மைதானத்தில் இருந்த அனைவரும் ஆச்சர்யமடையும் விதத்தில் Tabraiz Shamsi ஒரு மேஜிக் செய்தார். தனது கையில் இருந்த ரிப்பனை கண்ணிமைக்கும் நொடியில் செங்கோல் போல மாற்றி அசத்திவிட்டார். இவரது மேஜிக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் விளையாடியுள்ளார், இவர் அப்போது ஏதாவது மேஜிக் செய்திருந்தால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி காப் அடித்திருக்குமோ என்னமோ!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top