Misc

மாத்திரை எப்படி சாப்பிடவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? இதுநாள் வரை எவ்வளவு தப்பாக சாப்பிட்டிருக்கோம் என்று தெரியுமா?

Apr 30 2021 10:01:00 AM

நம் உடலில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்வதற்கு தான் மருத்துவர் நமக்கு மாத்திரைகளை வழங்குகிறார். அதை சரியான முறையில் சாப்பிடவில்லை என்றால் அதனாலும் நமக்கு ஆபத்துகள் நேரலாம். எனவே மாத்திரை எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.

tablet-eating

மாத்திரைகளில் பல விதம் உள்ளது. மாத்திரையின் தட்ப வெட்ப நிலைக்கேற்றவாறு தண்ணீரை பயன்படுத்த வேண்டும். வைட்டமின் மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகளை பாலுடன் சேர்த்து குடித்து விடலாம். சில வகையான மாத்திரைகளுக்கு சூடான நீரை பயன்படுத்தக்கூடாது. உதாரணமாக கேப்சியூல் வகை மாத்திரைகளை சுடு தண்ணீருடன் சேர்த்து குடித்தால் அது அப்படியே உங்கள் நாக்கில் ஒட்டிக்கொள்ளும்.

tablet-eating

காய்ச்சல் மாத்திரைகளை வெதுவெதுப்பான தண்ணீருடன் சேர்த்து குடிக்கலாம். மாத்திரையை சாக்லேட் போல கடித்து சாப்பிட கூடாது. அப்படி சாப்பிடுவது நல்லதல்ல. மாத்திரையை தண்ணீருடன் சேர்த்து குடிப்பதே சிறந்ததாகும். தண்ணீர் பயன்படுத்தி விழுங்கவில்லை என்றால் அது அஜீரண கோளாறை ஏற்படுத்த வாய்ப்புண்டு. காலை அல்லது இரவு எந்த நேரமாக இருந்தாலும் உணவு முடித்த அடுத்த நொடியே மாத்திரையை விழுங்க கூடாது. உணவை சாப்பிட்டு குறைந்தது 15 முதல் 20 நிமிட இடைவெளியில் மட்டுமே மாத்திரையை சாப்பிட வேண்டும்.