#headphone: என்றாவது உங்க ஹெட் போனை மாற்றி அணிந்திருக்கிறீர்களா? இது போன்ற குறியீடுகளை பார்த்தது உண்டா?
  • 21:54PM Sep 23,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 21:54PM Sep 23,2019 Chennai

உங்களது வாழ்க்கையில் பாட்டு கேட்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? நீங்க தினமும் பாட்டு கேட்பவர்களா?பாட்டு கேட்க Head phone  பயன்படுத்துபவர்களா? அப்படி என்றால் உங்களுக்கு தான் இந்த பதிவு. அனைத்து விதமான Head phone-லும்  L (இடதுபுறம்) மற்றும் R (வலதுபுறம்) இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா? 

இது மட்டும் அல்லாமல்  மற்றொரு அடையாளமும் அதில் உண்டு. அது ஒரு புள்ளி போன்று இருக்கும். இடதுபுறம் (L) என குறிப்பிடப்பட்ட  Head phone-னின்  உட்பகுதியில் ஒரு புள்ளி இருக்கும். வலதுபுறம் (R) வைக்க வேண்டிய Head phone-னின்  வெளிப்பகுதியில் ஒரு புள்ளி இருக்கும்.

இவை பார்வையற்றவர்களுக்காக  L(இடதுபுறம்) / R(வலதுபுறம்) அறிந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த அடையாளங்கள் இரவில் அனைவருக்கும் மிகவும் பயன்படும். அது போல என்றாவது  இடம், வலம் இவற்றை மாற்றிப் பொருத்திக் கொண்டால் என்னவாகும் என சிந்தித்தது உண்டா? முயற்சி செய்து பாருங்க!  ஒரு சில Head phone நிறுவனங்களில் இது போன்ற அடையாளங்களை பார்க்க முடியாது என்பதால் இது பொதுவான தரநிலை அன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில பிராண்டுகளில் மட்டுமே இது போன்ற குறியீடுகளை காணமுடியும்   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top