Misc

சுவிஸ் வங்கியில் வெறும் பணக்காரர்கள் மட்டும் தான் பணம் போட முடியுமா? நம்மைப் போன்ற மக்களும் சுவிஸ் வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா?

Jul 20 2021 05:30:00 PM

உலகில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் மட்டும் தான் சுவிஸ் வங்கியில் கணக்கு ஆரம்பிக்க முடியும் என்று எல்லா படங்களிலும் காட்டுகிறார்கள். படத்தில் காட்டுவதெல்லாம் உண்மை கிடையாது. சுவிஸ் வங்கியில் இந்த உலகிலுள்ள மக்கள் யார் வேண்டுமானாலும் கணக்கு ஆரம்பிக்கலாம். மற்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் அந்த நாட்டு மக்கள் மட்டும் தான் கணக்கு தொடங்க முடியும். ஆனால் சுவிஸ் வங்கியில் மட்டுமே உலகில் உள்ள யார் வேண்டுமானாலும் கணக்கு தொடங்க முடியும்.

swis bank account

சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்க 250000 டாலர் முதலீடு செய்ய வேண்டும். மற்ற வங்கிகளை போல் இல்லாமல் இந்த சுவிஸ் வங்கிகள் அந்த சுவிஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்காது. அந்த மாவட்டமே அந்த ஊர்களிலுள்ள வங்கிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.

swis bank account

சுவிஸ் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க நீங்க நேரில் தான் செல்லவேண்டும். மற்ற வங்கிகளைப் போல ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் கணக்கு தொடங்க முடியாது. 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் சுவிஸ் வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாம். சுவிஸ் வங்கியின் கணக்கு விவரங்களை ஒரு போதும் வெளியிட மாட்டார்கள். அப்படி ஒரு வங்கி அந்த கிளையில் வைத்திருந்த நபரின் கணக்கு விவரங்களை வெளியிட்டால் அதற்கு மிக க*டுமையான த*ண்டனைகளும், அ*பாரதங்களும் விதிக்கப்படும். 1934 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் உள்ள பயனாளர்களின் கணக்கு விவரங்களை வெளியிடக்கூடாது என்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

swis bank account