WITNESS PROTECTION: சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வரைவு திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்!!!
  • 18:21PM Dec 06,2018 Chennai
  • Likes
  • 0 Views
  • Shares

WITNESS PROTECTION என்பது சர்வதேச நாடுகளில் நீண்ட காலமாக வழக்கத்திலிருக்கும் முறைதான். இந்த முறைப்படி சாதாரண வழக்குகளிலிருந்து, பெரிய வழக்குகள் வரை சாட்சிகளின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு கொடுப்பதுதான் இதன் முக்கிய பணி. இதனாலேயே பெரிய வழக்குகளில் மேலைநாடுகளில் தைரியமாகச் சாட்சி சொல்ல முன்வருவார்கள். இந்தத் திட்டத்தின்படி தேவைப்பட்டால், அந்த நபருக்கு மாற்று அடையாளத்தை ஏற்படுத்தக் கொடுக்கவும் அந்த அரசு ஏற்பாடு செய்யும். அதாவது பெரிய MAFIA கும்பல், வலிமையான அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிப்பவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற சூழ்நிலையில் அரசே அவரது தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு, மாற்று அடையாளம், உயிருக்குப் பாதுகாப்பு போன்றவற்றை ஏற்பாடு செய்து தரும்.

120 கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவிலோ இப்படி ஒரு முறை இல்லவேயில்லை. குறைந்தபட்சம், சாட்சியளிப்பவர் விவரங்களை வெளியிடாமல் வைத்திருப்பதே அபூர்வம். இதனால், மக்கள் நமக்கு எதற்கு வம்பு என்று எதையும் கண்டுகொள்ளாமலேயே வாழப் பழகி விட்டார்கள். இப்படி இருப்பதாலேயே குற்றவாளிகள் கொஞ்சம் கூட பயமே இல்லாமல் அனைத்து வேலைகளையும் செய்து பழகி விட்டார்கள். 2003-ம் ஆண்டில் CRIMINAL JUSTICE PRACTICES தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி வி.மலிமாத் குழு, வழக்குகளில் சாட்சியம் அளிப்போருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென பரிந்துரை செய்தது. இதனையடுத்து 2006-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட சட்ட கமிஷன் அறிக்கையில் இது குறித்து வரைவு திட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய அரசின் வரைவுத் திட்டம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வரைவு திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் அளித்ததோடு அல்லாமல், சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டத்தை அமல்படுத்தும் வரை, மத்திய அரசின் இந்த வரைவுத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் செயல்படுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனி POLICE STATION-லேயோ, COURT மூலமாகவோ சாட்சி விபரங்கள் வெளிப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை சட்டரீதியாக அந்த சாட்சியால் எதிர்கொள்ள முடியும். எக்காரணத்தைக் கொண்டும் சாட்சி பற்றிய அறிவிப்பை வெளிப்படுத்தக் கூடாது என்பதுதான் இதன் அடிப்படையே. மற்ற கூடுதல் விபரங்கள் வரைவுத் திட்டம் கையில் கிடைத்ததும் முழுமையான தொகுப்பாக அளிக்கிறோம். எப்படியோ இனி POLICE STATION அல்லது COURT எங்கேயிருந்தாலும் சாட்சி சொல்ல பயப்பட வேண்டியதில்லை என்று தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம். நடைமுறை??? அது அதைப் பின்பற் வேண்டிய அதிகாரிகளைப் பொறுத்து இருக்கிறது. பார்க்கலாம், என்ன தர இருக்கிறது இந்த WITNESS PROTECTION SCHEME என்பதை…

You Might Also Like These
Related Stories
Top