Timeless

மூளை கொஞ்சம் அதிகமா வேலை செஞ்சா இப்படியெல்லாம் யோசிக்க தோன்றுமோ? நீங்க ராணியா இருந்தா எப்படி வேண்டுமானாலும் சட்டம் போடுவீங்களா?

Jun 06 2021 05:42:00 PM

ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமாக சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரு சில நாடுகளில் சில வித்தியாசமான சட்டங்களும் இருக்கின்றன. வேடிக்கையாக இருக்கும் ஒரு சில சட்டங்கள் அந்தக்காலத்திலேயே நடைமுறையில் இருந்துள்ளது. ஒரு சில விசித்திரமான சட்டங்களை ஏன் அமல்படுத்துகின்றனர் என்பதே பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.

sunday-no-play different-law-england

16ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் ஒரு வித்தியாசமான சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின் படி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் யாரும் விளையாடக்கூடாது. எதற்காக இப்படி ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஏனெனில் பொதுவாக ஞாயிற்று கிழமையில் தான் எல்லோரும் தங்களது வீடுகளில் ஓய்வெடுப்பர். ருசியாக வேண்டியவற்றை சமைத்து சாப்பிடுவர். குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வர். வாரம் முழுவதும் உழைக்கும் தொழிலார்களுக்கு வாரத்தில் விடுமுறை நாளான அந்த ஒரு நாள் தான் மகிழ்ச்சியை கொடுக்கும்.

sunday-no-play different-law-england

ஆனால் அந்த ஒரு நாளில் விளையாடக்கூடாது என்று சட்டம் பிறப்பித்தால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எனவே இதை எதிர்த்து ஜான் செகண்டன் என்ற கோழி வியாபாரி ஒருவர் ராணி முதலாம் எலிசெபத்திடம் முறையிட்டார். தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களுடன் விளையாட வேண்டும் என்றும் ராணியிடம் அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை எழுதினார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ராணி ஒரு சில விளையாட்டுகளை விளையாடுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கினார்.