Lushgreen

காமெடி பட இயக்குனர் சுந்தர்.சி. வாழ்க்கையில் இனி சீரியஸான படங்களை எடுக்கமாட்டேன் என முடிவு எடுக்க இந்த படம் தான் காரணமா? இவ்வளவு நல்ல படத்தை மக்கள் தோ ற்கடித்து விட்டார்களே!

May 04 2021 05:21:00 PM

தமிழ் சினிமாவில் காமெடி படங்களை எடுப்பதில் சுந்தர்.சியை மிஞ்ச யாரும் கிடையாது. அந்த அளவுக்கு அவர் படத்தில் காமெடி சிறப்பாக இருக்கும். நவரச நாயகன் கார்த்தி ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு பெரிய ஆளாக வளம் வந்தார். அதற்கு முழுக்க முழுக்க காரணம் சுந்தர்.சி மட்டுமே.

sundar comedy movies anbe sivam

ஆரம்பம் முதலே இவர் காமெடி படங்களை எடுத்துவந்ததால் இவர் ஒரு காமெடி டைரக்டர் என்று தமிழ் சினிமா இவரை முத்திரை குத்தியது. மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, லண்டன் போன்ற பல காமெடி படங்களை எடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் படத்தை எடுத்தவரும் இவர் தான்.

sundar comedy movies anbe sivam

சுந்தர்.சி. இயக்கத்தில் அனைவரும் பார்த்து வியக்கும்படி ஒரு படம் 2003ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தின் பெயர் அன்பே சிவம். கமல்ஹாசன், மாதவன் நடிப்பில் அன்பே சிவம் படம் வெளியானது. படம் வெளியான போது இதெல்லாம் ஒரு படமா, இந்த படத்துக்கு இவ்வளவு பில்ட் டப்பா என்றெல்லாம் ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

sundar comedy movies anbe sivam

இந்த படத்தை சுந்தர்.சி. பெரிதும் நம்பி இருந்தார். படத்தைப் பற்றி நிறைய நெ கட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் இனி என் வாழ்க்கையில் சீரியசான சென்டிமெண்டான படங்களை எடுக்கவே மாட்டேன் என்று பேட்டி அளித்தார். இந்த படத்தைத் தான் மக்கள் இப்போது தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள். இந்த படம் வந்த போதே ரசிகர்கள் கொண்டாடி இருந்தால் சுந்தர்.சி. போன்ற நல்ல இயக்குனரிடமிருந்து தரமான படங்களை பெற்றிருக்கலாம்.

sundar comedy movies anbe sivam