Rainforest

சூரிய ஒளி படாத ஒரு நகரம் நம் பூமியில் இருக்கிறதா? சூரிய ஒளி இல்லாமல் இங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?

Jun 07 2021 01:48:00 PM

இந்த உலகில் சூரிய ஒளி படாத ஒரு பகுதி இருக்குமா? என்பது சந்தேகம் தான். நார்வே நாட்டின் தெற்கு பகுதிகளில் மிகப்பெரிய காடுகள் நிறைந்த இடங்கள் உள்ளன. இங்கே நிறைய பள்ளத்தாக்குகள் இருக்கின்றன. இங்கே ருஜூகான் என்ற அழகிய நகரம் உள்ளது. இந்த நகரத்தின் மீது சூரிய ஒளி எப்போதும் விழாதாம். இந்த நகரத்தில் ஒரு அழகிய நதியும் உள்ளது.

sun light narve city

மக்கள் இந்த நதியை சுற்றுலாத்தளம் போல பார்த்து ரசிப்பார்கள். ஆனால் இந்த நகரில் 100 வருடங்களுக்கு முன்னர் வெறும் 300 மக்களே வசித்துவந்தனர். பின்னர் இங்கே ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையை ஒரு மனிதர் நிறுவி இங்கு வாழும் மக்களுக்கு நம்பிக்கை அளித்தார். அதனால் இங்கே மக்கள் குடியேற்றம் அதிகரித்துள்ளது. இங்கே தற்போது 3500 மக்கள் வசிக்கிறார்கள்.

sun light narve city

10 வருடங்களுக்கு முன்னர் மார்ட்டின் ஆண்டர்சன் என்பவர் பாரிஸ் நகரில் இருந்து இங்கே வந்துள்ளார். இங்குள்ள மக்களுக்கு எப்படியாவது சூரிய ஒளியை பெற்றுத்தர வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார். பின்னர் இங்கே உள்ள ஒரு மலையின் மீது ஒரு மிகப்பெரிய கண்ணாடியைப் பொருத்தி இந்த ஊருக்கு தற்போது சூரிய ஒளி கிடைக்கும்படி செய்துள்ளார்.

sun light narve city

இந்த விஷயத்தை இவர் செய்து முடிக்க 10 வருடங்கள் ஆகியுள்ளது. 5கிலோ மீட்டர் உயரத்திற்கு மிகப்பெரிய கண்ணாடியை பொறுத்தியுள்ளார். அந்த கண்ணாடி சூரிய காந்தி செடியைப் போல செயல்படுமாம். அதாவது சூரியன் எந்த திசையில் பயணம் செய்தாலும் அந்த திசைக்கு திரும்பி சூரிய ஒளியை இந்த நகருக்கு பெற்றுத்தருமாம். இதற்காக தன் சொந்த காசு 8 லட்சம் அமெரிக்கன் டாலரை செலவு செய்துள்ளார். தற்போது இந்த நகரத்தில் மக்கள் அதிகஅளவில் குடியேற ஆரம்பித்துள்ளனர். ஒரு தனி மனிதனின் முயற்சியால் ஒரு நகருக்கே சூரிய ஒளி கிடைத்துள்ளது என்பது எல்லோராலும் மிகவும் விசித்திரமாக பார்க்கப்படுகிறது.

sun light narve city