6 கிலோ எடையில் பிறந்த அதிசய பெண் குழந்தை! எப்படி #SumoBabyGirl என்று கூறிப் பெருமைப்பட்ட தாய்!
  • 18:50PM Oct 15,2019 Australia
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:50PM Oct 15,2019 Australia

உலகளவில், பிறக்கும் குழந்தைகளின் சராசரி எடையானது 2 முதல் 3.5 கிலோ வரையே இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவருக்குக் கிட்டத்தட்ட 6 கிலோ எடையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தை சேர்ந்தவர்கள் Emma Millar மற்றும் Daniel Miller. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தற்போது அந்தக் குழந்தை தான் ஆஸ்திரேலியாவின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

#adamantchild: -குழந்தைகள் என்ன அடம்பிடித்தாலும் தயவு செய்து இந்த பொம்மையை மட்டும் வாங்கி கொடுத்து விடாதீர்கள்?

ஆஸ்திரேலியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எடை 3.3 கிலோ அளவில் தான் பிறக்கும், ஆனால் Emma Millar பிரசவித்துள்ள பெண் குழந்தையின் எடையானது 5.88 கிலோவாகும். 38 வாரங்கள் தாயின் வயிற்றில் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். 35-வது வாரத்தின் போது ultrasound மூலம் குழந்தையின் ஆரோகியத்தைப் பரிசோதனை செய்தபோது, குழந்தையின் எடை வெறும் 4 கிலோ தான் இருந்துள்ளதாக Emma தெரிவித்துள்ளார். குழந்தையின் எடை மேலும் அதிகரிக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இதுபோல எடை அதிகமாகப் பிறக்கும் 1.2 சதவீத குழந்தைகளில் Emma-வின் குழந்தையும் ஒன்றாகும். மருத்துவமனையில் இருந்த அனைவரும் தங்களின் குழந்தையைக் கண்டு பெரும் ஆச்சர்யம் அடைந்ததாக Daniel தெரிவித்துள்ளார். Miller தம்பதியினர் தங்களது குழந்தைக்கு Remi Frances Millar என்று பெயர் சூட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி Emma தனது மகளை Sumo Baby Girl என்று கூறிப் பாசமாக அழைத்து வருகிறார். Emma-வுக்கு ஏற்பட்ட Gestational diabetes காரணமாகக் குழந்தை அதிக எடையுடன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. Emma-வின் மற்ற இரண்டு குழந்தைகள் கூட எடை அதிகமாகவே பிரிந்துள்ளனர், ஆனாலும் அவர்களில் Remi தான் அதிக எடை கொண்டு பிறந்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top