Shoreline

சூடாக இருக்கும் இடத்தை நொடிப்பொழுதில் குளிர்விக்க, இதை மட்டும் செய்து பாருங்கள்

Apr 07 2021 09:03:00 PM

வாட்டி வதைக்கும் வெப்பத்தில் வீட்டின் உள்ளே வெப்பத்தை வராமல் தடுத்து பாதுகாக்கும் வழிமுறைகள் நிறைய இருக்கிறது. இதை பின்பற்றினால் கோடையிலும் நமது வீட்டை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.

summer-house-management

மரம் வளர்ப்பதில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. அதில் ஒன்று தான் மரம் தரக்கூடிய நிழல். வீட்டை சுற்றி மரம் இருந்தால் கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீத வெப்பத்தை மரம் தடுத்து நிறுத்தி விடும். இதன் மூலம் வீட்டில் அதிக வெப்பம் தாக்காது. மேலும் கோடை காலமாக இருந்தாலும் மரத்தின் அடியில் நின்றோமானால் குளிர்ந்த காற்றை மரங்கள் வழங்கும். மரம் வைக்க ஏதுவான சூழல் இல்லாதவர்கள் சிறிய செடி, கொடி போன்றவற்றை வைத்து கொள்ளலாம்.

summer-house-management

ஒரு கிண்ணத்தில் ஐஸ் கட்டிகளை போட்டு அதை மின்விசிறி அருகில் வைத்து விடுங்கள். குளிர்ந்த காற்றை வீடு முழுவதும் பரவச்செய்ய இந்த யோசனை உங்களுக்கு உதவும். வீட்டின் மேல்தளத்தின் தரைப்பரப்பில் சுண்ணாம்பை வைத்து ஒயிட்வாஷ் செய்வதினால் வெப்பம் உள்ளே இறங்காமல் பார்த்துக்கொள்ளலாம். மாடியில் வீட்டுத்தோட்டம் அமைப்பதும் சிறந்த ஐடியா தான். வீட்டில் குண்டு பல்புகளுக்கு பதில் எல்..டி பல்புகள் பயன்படுத்தலாம். குண்டு பல்பு அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்வதோடு எளிதில் வெப்பமடைந்து சுவர்களையும் வெப்பத்தை ஈர்க்கும்படி செய்து விடும். வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி வீட்டை சுத்தபத்தமாக வைத்திருந்தால் வீடு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும்.