#sujith rescue: சுஜித் விவகாரம் : ஊடகங்கள் மறைக்கும் உண்மை? உணர்ச்சிக்கு இரையாகிறோமா நாம்.?
  • 22:29PM Oct 26,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 22:29PM Oct 26,2019 Tamil Nadu

சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த விவகாரத்தில், எல்லோரும் மொத்தமாக அரசு மீது பழி போட்டு தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறோம். இது ஒரு சமூகப் பிரச்சனை. கள்ளிப் பால் ஊற்றி பெண் குழந்தைகளை கொன்று கொண்டிருந்த சமூகம் நாம். குழந்தைகளுக்கு கொஞ்சமும் முக்கியத்துவம் கொடுக்காத சமூகம் நாம். அதாவது சுதந்திரத்திற்குப்பிறகு. பழங்கால தமிழர்களின் கலாச்சாரத்தைச் சொல்லவில்லை. குழந்தைகள் எதிரில் சண்டை போடுவது , பைக்கில் குழந்தைகளுடன் 4 பேர் செல்வது , வன்முறைகளும் , ஆபாச கண்டென்டும் உள்ள படங்களை வீட்டில் உட்கார்ந்து குழந்தைகளுடன் பார்ப்பது, குழந்தைகள் இருக்கையில் கெட்ட வார்த்தை பேசுவது , குண்டு கட்டாக குழந்தைகளை பள்ளி வேனில் அல்லது ஷேர் ஆட்டோவில் அனுப்புவது , குழந்தைகள் இருக்கையில் தம் அடிப்பது , குழந்தைகள் எந்நேரத்திலும் உயிரைப் போக்கிக்கொள்ளும் வகையில் வீட்டை வைத்திருப்பது என மொத்தமாக குழந்தைகளுக்கு எதிரான அத்தனை அம்சங்களையும் வாழ்வியல் முறையிலேயே கொண்டிருக்கும் நாடு நம் நாடு.

எத்தனையோ வகைகளில் குழந்தைகள் சாகின்றன.டெல்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் பிரபலமாவதைப்போல , ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தால் குழந்தை மரணங்கள் பிரபலமாகின்றன. ஃபுட் பாய்ஸனால் சில குழந்தைகள் சாகலாம். டெங்குவால் சில குழந்தைகள் சாகலாம். ஆனால் , இந்தச் சாவுகளில் நமக்கு சமூக ஊடகங்களில் பொங்குவதற்கு ஏற்ற உணர்வெழுச்சி கைவரப்பெறாது. டெங்குவினால் ஒரு குழந்தை செத்தாலோ , எமெர்ஜென்ஸியில் அட்மிட் ஆகி ஒரு குழந்தை , அஜாக்கிரதையினால் செத்தாலோதான் நாம் அதிகமாக அரசுக்கு எதிராகப் போராட வேண்டும்.

மக்கள் எதற்கு பொங்குகிறார்கள் என்று பார்த்து அரசும் அரசு அதிகாரிகளும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆட்சியர், தாசில்தார் , பேரிடர் மீட்புக் குழு எல்லாம் ஆழ்துளை கிணற்றுப்பகுதிக்கு அனுப்பப் பட்டு , ஒரு மசாலா பட ரேஞ்சுக்கு பொது மக்கள் உணர்ச்சிக்கு தீனி போடுகிறார்கள். அரசு பேருந்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் ஒரு குழந்தைக்காக ஆட்சியர் போக மாட்டார் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

ஆழ்துளை கிணற்றை போட்டு மூடாதவர் , அஜாக்கிரதையாக இருந்த பெற்றோர்கள் , இதற்கு ஒழுங்கான விதிகளை வகுக்காத அரசு என எல்லோரும் குற்றவாளிகள். ஆழ்துளை கிணறு விஷயம் , சுவாரசியமாக இருப்பதால் சமூக ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் தருகின்றன. இதில் ஒரு க்ளைமாக்ஸ் இருப்பதும் முக்கியமான அம்சம். இது மட்டுமல்லாமல் , இதைத் தாண்டி சமூக ஊடகங்கள் , மொத்த குழந்தைகள் பாதுகாப்பையும் , குழந்தைகள் நலனையும் உறுதி செய்யும் விதத்தில் கூடிய விரைவில் மெச்சூர்டாக மாறினால் சிறப்பு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top