Highrise

எந்த கட்டுப்பாடும் இல்லையா? இப்படி தண்ணி தெளிச்சு விட்டா புள்ளிங்க ஒழுங்கா படிப்பாங்களா? இது என்ன மாதிரியான சிஸ்டம் என புரியலையே!

Sep 14 2021 11:44:00 AM

கடுமையான விதிமுறைகள் இன்னமும் கூட ஒரு சில நாடுகளில் உள்ள பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. ஆனால் குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே சென்று தான் நெறிமுறைப்படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொண்ட ஒரு சில நாடுகளில் சில வித்தியாசமான பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. அப்படி ஒரு பள்ளி குறித்து தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். சட்பரி பள்ளத்தாக்கு பள்ளி 1968 இல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் ஃப்ரேமிங்ஹாமில் உள்ள ஒரு சமூகத்தால் நிறுவப்பட்டது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் சட்பரி மாதிரியை அடிப்படையாகக் கொண்ட பல பள்ளிகள் செயல்பாட்டில் உள்ளன.

sudbury-valley-school

இந்த மாதிரியில் மூன்று அடிப்படை கோட்பாடுகள் உள்ளன. கல்வி சுதந்திரம், ஜனநாயக ஆட்சி மற்றும் தனிப்பட்ட பொறுப்பு. இந்த பள்ளியில் 4 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகள் கல்வி கற்கின்றனர்.

sudbury-valley-school

சட்பரி பள்ளத்தாக்கு பள்ளி 1968 இல் டேனியல் கிரீன்பெர்க், மிம்ஸி சடோஃப்ஸ்கி மற்றும் சில உள்ளூர் மக்களால் நிறுவப்பட்டது. கிரீன்பெர்க் ஒரு பள்ளி அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டார். இது மனரீதியாக வசதியாகவும், சுய-கட்டுப்பாட்டைக் கொண்ட உண்மையான வாழ்க்கையை கற்றலுக்கான முதன்மை ஆதாரமாகவும் இருந்தது.

sudbury-valley-school

இந்த பள்ளி 1968 கோடையில் தொடங்கியது. செப்டம்பர் மாதம் பள்ளி தொடங்குவதற்கு முன்பு 130 மாணவர்கள் சோதனை அமர்வில் சேர்ந்தனர். 1990 களில் அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் சட்பரி மாடல் பிரபலம் அடையத் தொடங்கியது.

sudbury-valley-school

இந்த மாடல் பள்ளிகளில் பாரம்பரிய வகுப்பறைகள் இல்லை. மாறாக குழந்தைகள் தாங்கள் விரும்பியதைச் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தங்களை கல்வியின் ஒரு பகுதியாக, கல்விசார் ஆய்வு மேற்கொள்வது அல்லது மற்ற மாணவர்களுடன் பாடங்களை கலந்தாலோசிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

sudbury-valley-school

மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தங்கள் நேரத்தை செலவிடலாம். மாணவர்களுக்கு அவர்களின் சொந்தக் கல்விக்கான முழுப் பொறுப்பும் வழங்கப்படுகிறது. இந்தப் பள்ளி நேரடி ஜனநாயகம் என்ற முறையின்படி நடத்தப்படுகிறது. இங்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் சமமாக உள்ளனர்.

sudbury-valley-school

சட்பரி பள்ளியில் இருக்கும் அனைவருக்கும் வாக்குரிமை கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளியை நடத்த தேவைப்படும் பணியாளர்களை அவர்களே நியமித்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டு பள்ளியின் பணியாளர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர்.

sudbury-valley-school

அடிக்கடி பள்ளியின் உறுப்பினர்கள் கூட்டம் கூடி பள்ளிக்கு தேவையான வசதிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட தேவைகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். இவர்களுடைய தேவைகளை இவர்களே பூர்த்தி செய்து கொள்கின்றனர். இங்கு பயின்ற முன்னாள் மாணவர்களும் இந்த பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்கின்றனர். யாரையும் எதிர்பாராமல் தன்னுடைய சுய தேவைகளை தாங்களே செய்துகொள்ளுதல் உள்ளிட்ட பல அத்தியாவசிய கோட்பாடுகள் இங்கு பயிலும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.